வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தென்காசிக்கு அருகே உள்ள அடர்ந்த காட்டில் படத்திற்குரிய முக்கியமான போர்க்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சி எப்படியோ லீக்கானதால் தனுஷ் பயங்கர அப்செட்டில் இருக்கிறார். இதனால் அந்த காட்சியை நீக்கிவிட வேண்டும் என தனுஷ் படக்குழுவிடம் ஸ்ட்டிட்டாக ஆக சொல்லிவிட்டாராம்.
சுதந்திரத்திற்கு முந்தைய கட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. தற்போது இந்த படத்தின் அதிரடி ஆக்சன் காட்சி தென்காசி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடைபெற்று வந்தது.
இந்த படத்தின் முக்கியமான போர்க்காட்சிகளை வீடியோகிராபர் ஒருவர் பதிவு செய்து அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இந்த காட்சிதான் படத்தின் முக்கிய சீன் என்பதால் அதை பார்த்ததும் படக்குழு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த காட்சியை சோஷியல் மீடியாவில் இருந்து எப்படியாவது நீக்க வேண்டும் என தனுஷும் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறாராம்.
அதே சமயத்தில் இந்த போர்க்காட்சி இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து, கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கையும் பலப்படுத்தி உள்ளனர். படப்பிடிப்பு தளத்திற்குள் செல்போன், வீடியோ கேமராக்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதிக்க வில்லையாம்.
அதே சமயம் முக்கிய காட்சி லீக்கானது என படக்குழு டென்ஷனாக இருக்கும்போது, இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கு சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிகிறது. ஏனென்றால் இயக்குனர் எந்த வித கிராபிக்ஸும் செய்யாமல் இந்த காட்சியை சிறப்பாக எடுத்திருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். மேலும் கேப்டன் மில்லர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான் இந்த போர் காட்சி என்பதால் கூடிய விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, ரிலீஸ் தேதியும் படக்குழு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.