தென்னிந்திய பிரபலங்கள் 29 பேர் மீது வழக்கு.. ஷாக்கான திரையுலகம்

News : தற்போது 29 திரை பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த செய்தி சினிமா வட்டாரம் மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு ஷாக்கிங் நியூஸ் தான்.

சமீபகாலமாக திரைத்துறையினர், யாராவது ஒருவர் ஏதாவது வழக்கில் சிக்கிக் கொண்டே இருக்கிறார்கள். என்ன இந்த சினிமாவுக்கு வந்த சோதனை என்பது போல தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு சிக்கலிலும் மாட்டிக்கொள்ளும் நடிகர்கள் சினிமாவில் பிரபலம் அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மேல் வழக்கு பதிவு செய்தது அமலாக்கத்துறை. தடை செய்யப்பட்ட சூதாட்ட செயலியான ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததால் இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களில் நடித்த அனைவரும் சினிமாவின் முக்கிய பிரபலங்களாகும்.

பிரபலங்களின் பட்டியல் இதோ :

முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவர்கொண்டா, ராணா இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி மற்றும் ப்ரணிதா மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது அமலாக்கத்துறை. தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவாக விளம்பரம் நடித்துக் கொடுத்ததில் வந்தது இந்த வினை.

ரம்மி,ரம்மி என்று அந்த விளையாட்டின் மீது பைத்தியம் பிடித்து பணத்தை கட்டி ரம்மி விளையாடி நடு தெருவுக்கு வந்த குடும்பங்கள் நிறைய இருக்கிறது. அதிலும் பணத்தை இழந்த சோகத்தில் நிறைய பேர் தற்கொலையும் செய்தும் இறந்திருக்கின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தடை செய்யப்பட்ட இந்த விளையாட்டிற்கு ஆதரவு தெரிவித்த நடிகர்களின் மீது தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு நாள் எதற்கும் செவி கொடுக்காத அமலாக்கத்துறை தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி தான்.

இந்நிலையில் அனைத்து பிரபலங்களும் கூறியதாவது, “நாங்கள் அக்ரீமெண்ட் போட்டு விட்டு தான் அந்த விளம்பரங்களில் நடித்தும் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்கள்” தற்போதைய இந்த செய்தி வலைதளத்தில் பயங்கரமாக பரவிக் கொண்டு வருகிறது.