அம்பானி ரேஞ்சுக்கு நடக்கும் ஐசாரி கணேஷ் வீட்டு கல்யாணம்.. விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்

Ishari Ganesh : சமீபத்தில் ஒட்டுமொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த கல்யாணம் தான் அம்பானி வீட்டு கல்யாணம். மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த கல்யாணம் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கடந்து நடத்தப்பட்டிருந்தது.

அதேபோல் சிறிய அம்பானி ரேஞ்சிக்கு தான் தயாரிப்பாளர் ஐசாரி கணேஷ் தனது மகள் திருமணத்தை நடத்த இருக்கிறார். வருகின்ற வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் முக்கிய புள்ளிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பெரிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஐசாரி வீட்டு கல்யாணத்தில் யார் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது.

ஐசாரி கணேஷ் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்

அதில் விஜய், ரஜினிகாந்த், கமலஹாசன், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி போன்றபிரபலங்களள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் அரசியல் பிரபலங்களில் முதலமைச்சர் ஸ்டாலின், தொல் திருமாவளவன் போன்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் ஐசாரி கணேஷிடம் வேலை பார்ப்பவர்களே கிட்டத்தட்ட 8000 பேருக்கு அதிகமானவர்களாம். இந்த திருமணத்தில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்காக ஈசிஆர் இல் 30 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. தனது மகளுக்காக ஐசாரி கணேஷ் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்.