கூலி படத்தை விமர்சித்து மாட்டிக்கொண்ட பிரபலங்கள்.. ஆதாரத்தோடு மாட்டினர்

Coolie : கூலி படம் ரிலீஸ் ஆனதிலேருந்தே எங்கு பார்த்தாலும் கூலி படத்தின் விமர்சனங்கள், ட்ரோல்ஸ் என கூலி படம் சமூக வலைத்தளங்களில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. என்னதான் படம் நேர்மறையான கருத்துக்களை சந்தித்தாலும், சில எதிர்மறையான கருத்துக்களையும் சந்தித்தான் ஆகவேண்டும்.

அவ்வாறு சில எதிர்மறையான கருத்துக்களை கூட தாங்கி கொள்ளலாம், ஆனால் வேண்டுமென்றே எதிர்மறையான கருத்துக்கள் கூறுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக இல்லை. எனவே இத்தகைய கருத்துக்களை ரஜினி ரசிகர்கள் எதிர்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கூலி படத்தை விமர்சித்து மாட்டிக்கொண்ட பிரபலம்..

ரஜினி மார்க்கெட்டிங் காலிசெய்ய சில விமர்சகர்கள், எதிர்பாளர்களிடம் இதுபோல பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் செய்வது ஒன்றும் புதிதல்ல. அதுபோல தற்போது பிரசாந்த் என்ற பட விமர்சகர் கூலி படத்தை பற்றி எதிர்மறையான விமர்சனத்தை கூறி மாட்டிக்கொண்டார்.

அதுவும் இவர் விஜய் அல்லது விஜய் ரசிகர்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு பிரஷாந்த் என்ற பட விமர்சகர் இந்த வேலையை பார்த்திருக்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பேசிக்கொள்கிறார்களாம். பிரசாந்த் கொடுத்துள்ள கூலி விமர்சன வீடியோவிலேயே கமெண்ட் போட்டு திட்டி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

என்னது விஜய் அல்லது விஜய் ரசிகர்களிடம் காசு வாங்கி கொண்டு, இவ்வாறு விமர்சனம் செய்கிறார்களா? என விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் ஷாக் ஆகி விட்டார்களாம். இந்த ஒரு சோசியல் மீடியா பிரபலம் மட்டுமல்லாமல். கூலி படத்தை பற்றி எதிர்மறையாக விமர்சிக்கும் அத்தனை பிரபலங்களையும் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கட்டம்கட்டி திட்டி வருகிறார்களாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரஜினி, விஜய் ரசிகர்களிடையே பிரச்சினையை கிளப்பும் விதமாக இந்த செய்தி அமைந்துள்ளது. எதற்காக விஜய் ரசிகர்களை டார்கெட் செய்கிறீர்கள் என ஒருபக்கம் ரஜினி ரசிகர்களுக்கு எதிராவும் பேசிவருகிறாரார்களாம். ஏதோ ஒரு சுயநலத்திற்காக செய்யப்பட்ட சிறிய விமர்சனம் எவ்வளவு பெரிய பிரச்சினை கிளப்பும் விதமாக அமைந்துள்ளது என திரைவட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.