ரெட்ரோ தோல்வி படம்.. கார்த்திக் சுப்புராஜை வாரிய பிரபலம்

Karthik subbaraj : சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகி இருந்தது. சமீபத்தில் இந்த படம் 104 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

மேலும் படத்தின் லாபத்தில் 10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா நன்கொடையாக வழங்கி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் ரெட்ரோ படத்தின் வெற்றி விழாவை கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர்.

இப்படி இருக்கும் சூழலில் ரெட்ரோ தோல்வி படம் என பத்திரிக்கையாளர் அந்தணன் கூறி இருக்கிறார். அதாவது படத்தின் ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தது. அதாவது சிரிக்கவே செய்யாத ஒருவன், தான் சிரித்தது மட்டுமல்லாமல், சிரிக்க தெரியாத கூட்டத்தையும் சிரிக்க வைக்கிறான்.

ரெட்ரோ படத்தை தோல்வி படம் என்று கூறிய பிரபலம்

அதுமட்டுமல்லாமல் காதலுக்காக ரவுடி தனத்தை விடுகிறான். இவ்வாறு இந்த ஒன்லைன் ஸ்டோரியை நன்றாக எடுத்துச் சென்றிருக்கலாம். அதுவும் சூர்யா இந்த படத்தில் ஓவர் ஆக்டிங் இல்லாமல் கனகச்சிதமாக நடித்திருந்தார்.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தேவையே இல்லாத விஷயங்களை படத்தில் நுழைத்து சொதப்பிவிட்டார். படம் ஆப்பிரிக்கா, அந்தமான் என்று எங்கெங்கோ போகிறது. மேலும் கடந்த பத்து வருடங்களில் சூர்யா வெற்றி படங்கள் எதுவும் கொடுக்கவில்லை.

ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று படம் வெற்றியாக இருந்தாலும் ஓடிடியில் வெளியானது. ஆனாலும் அவர் வெற்றி கொடுப்பார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் கதை தேர்வில் சூர்யா கவனம் செலுத்தலாம்.

சூர்யாவின் தம்பி கார்த்தி நிதானமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதேபோல் சூர்யாவும் செய்தால் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அந்த பேட்டியில் அந்தணன் கூறியுள்ளார்.