அஜித்துக்கு விபூதி அடித்த ஆதிக்.. வச்சு செய்யும் பிரபலம்

Ajith : ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இதுவரை அஜித் படங்களில் உள்ள ரெஃபரன்ஸை வைத்து ஆதிக் இப்படத்தை எடுத்திருந்தார்.

ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் எடுத்திருந்தார். இது பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் ஒரு சில விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அதாவது கதை இல்லாமல் அஜித்தின் பழைய படங்களை எடுத்து ரீல்ஸ் போல ஆதிக் உருவாக்கி இருக்கிறார் என்று கூறுகின்றனர். அதேபோல் ப்ளூ சட்டை மாறனும் இதை விமர்சித்து ட்வீட் செய்து இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்

blue-sattai-maran
blue-sattai-maran

உருப்படியான கதை மற்றும் திரைக்கதை யோசிக்க முடியாததால் பழைய படங்களின் ரெஃபரன்ஸ் காட்சி, வசனம், பாடல்களை வைத்து இயக்குனர்கள் படம் எடுத்து வருகிறார்கள். விஜய்க்கு வெங்கட் பிரபு அடித்த விபூதி தான் கோட் படம்.

இப்போது அதே விபூதி பொட்டலத்தின் மீதியை எடுத்து குட் பேட் அக்லி என்னும் விபூதியை அஜித்துக்கு ஆதிக் அடித்துள்ளார் என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார். ப்ளூ சட்டை மாறனுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

ஆனால் முக்கால்வாசி படங்களை மோசமாக விமர்சித்து வருவார். உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் என்று யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் அடித்து போடுவது வழக்கம். இப்போது ப்ளூ சாட்டையின் இந்த ட்வீட்டுக்கு அஜித் ரசிகர்கள் மோசமாக திட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.