First Review Of Dhruva Natchathiram: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ரித்து வர்மா, விநாயகன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் படம் தான் துருவ நட்சத்திரம். பல வருடங்களாக கிடப்பில் கிடந்த இப்படம் இப்போது தட்டு தடுமாறி ரிலீசுக்கு தயாராகி விட்டது.
அந்த வகையில் வரும் 24ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை பற்றிய விமர்சனத்தை இயக்குனர் லிங்குசாமி சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இதுதான் படத்திற்கான முதல் மற்றும் சிறப்பான விமர்சனமாகவும் இருக்கிறது.
அவர் கூறியிருப்பதாவது, துருவ நட்சத்திரம் படத்தை நான் பார்த்து விட்டேன். அதில் விக்ரம் வழக்கம் போல மிரட்டி இருக்கிறார். அதேபோன்று விநாயகன் இந்த படத்தின் மூலம் அனைவரின் மனதையும் திருடி விடுவார். மேலும் படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அந்த வகையில் நிச்சயம் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய இந்த விமர்சனம் இப்போது படத்திற்கு மிகப்பெரும் பிரமோஷன் ஆக அமைந்துள்ளது.

மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் துருவ நட்சத்திரத்தை பற்றி ஆகா ஓகோ என புகழ்ந்துள்ளார். அதிலும் கௌதம் மேனன் இயக்கிய படங்களில் இது சிறப்பானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இப்படியாக தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் துருவ நட்சத்திரம் லேட்டா வந்தாலும் சிறப்பான சம்பவம் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.