வீர தீர சூரனுக்கு அஜித் படம் எவ்வளவு மேல்.. பேட்டியில் ஆதங்கப்பட்ட பிரபலம்

Ajith : சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் வசூலை பெறவில்லை என்றாலும் பல கோடி கலெக்ஷன் செய்ததாக அறிவிக்கின்றனர். நடிகரின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காகவும் அவர்களின் அடுத்த பட வாய்ப்பை பெறுவதற்காகவும் இந்த யுக்தியை கையாண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் படம் வெளியான மறுநாளே சக்சஸ்மீட் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் விக்ரமின் நடிப்பில் வீரதீர சூரன் 2 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இது ஓரளவு நல்ல வசூலை பெற்று வெற்றி அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் திருப்பூர் சுப்ரமணியன் இது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வீரதீர சூரன் படம் வெற்றி படம் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள முடியாது.

வீரதீர சூரன் தோல்வி படம் என்று கூறிய பிரபலம்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தையாவது ஒருவகையில் வெற்றி லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் அந்தப் படம் ஏதோ வசூல் ஆனது. ஆனால் வீர தீர சூரன் படம் தியேட்டரில் வசூலே பெறவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் இந்த படம் ஹிட் என்று நினைத்துக் கொண்டு அதே போன்ற படங்களில் நடிக்க முடிவெடுத்து விடுகின்றனர். அப்படி செய்வதை முதலில் நிறுத்துங்கள். நல்ல கதையை தேர்ந்தெடுத்து வெற்றி கொடுங்கள்.

பெரிய நடிகர்களை நம்பி படத்தை வெளியிட்டால் தியேட்டர் நஷ்டத்தை தான் சந்தித்து வருகிறது. ஆனால் வெளியில் வெற்றி பெற்றது என்று பெரிய மாலை போட்டு கொண்டாடப்படுவது வேதனை அளிப்பதாக திருப்பூர் சுப்ரமணியன் கூறி இருக்கிறார்.