பேரு தான் ராசி இல்ல.. ரவி மோகனை அடுத்து பெயரை மாற்றிய பிரபலம்

Ravi Mohan: பொதுவாகவே சினிமாவில் பெயர் ராசி உண்டு என்பதை பெரும்பாலான இயக்குனர்கள் நம்புகின்றனர். அப்படி தான் இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய படத்தில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு ஆர் எழுத்தில் பெயர் வைப்பார்.

அப்படி உருவான நடிகைகள் தான் ராதிகா, ராதா, ரேவதி. இவர்கள் எல்லோருமே சினிமாவில் பெரிய உயரத்தை அடைந்த நிலையில் அதில் ராசி இருக்கிறது என்று நினைக்கத் தான் தோன்றுகிறது. இந்த சூழலில் தன்னுடைய முதல் படமான ஜெயம் வெற்றியை தொடர்ந்து தனது பெயரை ஜெயம் ரவி என்று வைத்துக் கொண்டார்.

ஆனால் சமீப காலமாக தொடர் தோல்விக்கு பிறகு ரவி மோகன் என்று பெயரை மாற்றிக்கொண்டார். இப்போது அதேபோல் மற்றொரு வாரிசு நடிகரும் தனது பெயரை மாற்றியுள்ளார். கடல் படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கார்த்திக்கின் வாரிசு கௌதம் கார்த்திக்.

ரவி மோகன் போல் பெயரை மாற்றிய பிரபலம்

இப்போது கிரிமினல் மற்றும் ஆர்யாவுடன் மிஸ்டர் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய பெயர் ஒர்க் அவுட் ஆகாததால் இப்போது மூன்று எழுத்தில் பெயரை மாற்றி இருக்கிறார். அதாவது கௌதம் ராம் கார்த்திக் என்று வைத்துள்ளாரம்.

இவரின் உண்மையான பெயர் கௌதம் ராம் தான். சினிமாவுக்காக கௌதம் கார்த்திக் என்று வைத்துக் கொண்ட நிலையை இப்போது முழு பெயரையும் வைத்திருக்கிறார். அதோடு சுருக்கமாக GRK என்று இப்போது அழைக்கிறார்களாம்.

அவரது பட டைட்டிலிலும் கௌதம் ராம் கார்த்திக் என்று தான் குறிப்பிட்டுள்ளனர். இந்த பெயர் மாற்றத்திற்கு பிறகு கௌதம் ராம் கார்த்திக் சினிமா கேரியர் பெரிய அளவில் வளர்ச்சி பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.