தற்கொலை செய்து கொண்ட விஜய் பட நடிகை.. கேவலமாக வீட்டில் திருடி சென்ற பிரபலங்கள்

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகளின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது. பெரும்பாலும் நடிகைகளின் மரணம் மர்மமாகத்தான் இருந்து வருகிறது. சில்க் ஸ்மிதா முதல் விஜய் டிவி விஜே சித்ரா வரை நடிகைகளின் மரணம் கேள்விக்குறியாக இருக்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் 21 வருடங்களுக்கு முன்பு விஜய் பட நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய மரணத்தில் உள்ள மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படி அதிர்ச்சி தரும் சில விஷயங்களும் வெளிவந்துள்ளது.

அதாவது சிம்ரனின் தங்கையான மோனல் தற்கொலை சம்பவம் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் விஜய்யின் பத்ரி படத்தில் நடித்திருந்தார். மோனல் தற்கொலை செய்து கொண்ட சமயத்தில் சிம்ரன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து கொண்டிருந்ததாம்.

அதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு நடிகர் ரியாஸ் கான் மற்றும் நடிகை மும்தாஜ் சென்றுள்ளதாக சிம்ரன் கூறியிருந்தார். மோனல் கோரியோகிராபர் பிரசன்னா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் கலா மாஸ்டரின் அண்ணன் மகன் ஆவார். அந்தச் சமயத்தில் மோனல் மற்றும் பிரசன்னா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த மோனல் தற்கொலை செய்து கொண்டதாக சிம்ரன் கூறினார். அதுமட்டுமின்றி தற்கொலை செய்து கொண்ட அன்று ரியாஸ் கான் மற்றும் மும்தாஜ் இருவரும் மோனலின் டைரி மற்றும் அங்கு இருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் சிம்ரன் குற்றம்சாட்டி உள்ளார்.

ஏனென்றால் இவர்கள் கலா மாஸ்டர் நண்பர்கள் என்பதால் எந்த ஆதாரமும் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசியல் பெரும்புள்ளியின் ஆதரவு கலா மாஸ்டரிடம் இருந்ததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என சிம்ரன் தெரிவித்திருந்தார்.