chandramukhi 2: ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பல வருடங்களுக்கு பி வாசு இயக்கி வருகிறார். இந்த சூழலில் ரஜினி எப்போதுமே தன்னுடைய இரண்டாம் பாக படத்தில் நடிக்க விரும்ப மாட்டார்.
ரஜினியின் ஆசீர்வாதத்துடன் நடிகர் லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, ராதிகா சரத்குமார் போன்ற எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் குரூப் போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் சந்திரமுகி 2 படம் வெளியாக இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா தயாரித்திருக்கிறது. இந்நிலையில் படத்தை பார்த்து விட்ட இசையமைப்பாளர் கீரவாணி தனது முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
அதாவது பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 படத்திலும் பணியாற்றியுள்ள கீரவாணி படத்தை சமீபத்தில் பார்த்திருக்கிறார். அதோடு தனது கருத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சந்திரமுகி 2 படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் மரண பயத்தில் தூக்கத்தை தொலைத்து உள்ளனர்.
நான் இந்த படத்தின் அருமையான காட்சிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்களாக இரவு பகலாக தூக்கம் இன்றி தன்னுடைய உழைப்பை போட்டுள்ளேன் என்றும் கீரவாணி அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால் கண்டிப்பாக இப்படம் சாவு பயத்தை காட்டும் விதமாக வாசு எடுத்து இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
மேலும் படத்திற்கு இசை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக த்ரில்லர் படங்களில் இசைக்கு தான் அதிக வேலை. அந்த வகையில் கீரவாணி சந்திரமுகி 2 படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறார். இவருடைய இந்த முதல் விமர்சனம் படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் தோன்றி இருக்கிறது.
