ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த சந்திரமுகி-2 போஸ்டர்.. அனல் பறக்கும் வேட்டையனின் அடுத்த அவதாரம்!

Chandramugi 2: சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி வெளிவந்த சந்திரமுகி படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்தனர். அதிலும் வேட்டையனாக வந்த ரஜினியின் அவதாரத்தை மறுபடியும் பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக லாரன்ஸ் நடித்திருக்கிறார். முக்கியமாக ரஜினியின் முழு சம்மதத்தையும், ஆசிர்வாதத்தையும் பெற்ற பிறகு லாரன்ஸ் நடிக்க ஆரம்பித்தார்.  இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ராணவத் நடித்திருக்கிறார். மேலும் காமெடிக்கு வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் லைக்கா தயாரித்து, பி வாசு இயக்கி உள்ளார். தற்போது அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது ரிலீஸ் ஆகும் படங்கள் எப்பொழுதுமே லீவு தினத்தன்று வெளியிட்டால் குடும்பமாய் பார்த்து ரசிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

அதனால் பெருத்த லாபமும் அடைய வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வகையில் சந்திரமுகி 2 செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வர இருக்கிறது. மேலும் தற்போது அனல் பறக்கும் வேட்டையனின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்போஸ்டரில் லாரன்ஸை பார்க்கும் பொழுது, சும்மா அதிருதில்ல என்று சொல்வதற்கு ஏற்ப கச்சிதமாக இருக்கிறது.  ஏற்கனவே லாரன்ஸ்க்கு இந்த மாதிரியான படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் கைவந்த கலை.

எப்படியும் வெற்றியை பார்க்காமல் விடமாட்டார். அதுவும் பி வாசு இயக்கத்தில் ஏற்கனவே வெற்றி பெற்ற ரஜினி படம், இன்னும் சொல்லவா செய்ய வேண்டும். இப்படத்தின் மூலம் லாரன்ஸுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அத்துடன்  இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது

மேலும் லாரன்ஸின் வேட்டையின் நடிப்பை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு  இருக்கிறார்கள். இப்படம் கொலை நடுங்க வைக்கும் அளவிற்கு மரண பயத்தை கொடுக்கப் போகிறது என்று இப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் சந்திரமுகி 2 சூப்பர் ஹிட் படமாக இருக்கப் போகிறது.