கவிஞர் கபிலனின் மகள் தூரிகை சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆங்கில நாளிதழை திறம்பட நடத்தி வரும் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், கவிதை, கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதி இருக்கிறார். மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய தைரியமும், பக்குவமும் கொண்ட இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்ற கேள்விதான் தற்போது திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது. அதிலும் தூரிகையை பற்றி தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் அவருடைய இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் சிங்கப்பெண் போன்று துணிச்சலாக இருக்கும் இவர் இப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் முதற்கட்ட விசாரணையில் அவர் தன் பெற்றோர்களின் திருமண வற்புறுத்தல் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களுக்கெல்லாம் அவர் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என்கிறது அவருடைய நட்பு வட்டாரம். ஏனென்றால் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று சில வருடங்களுக்கு முன்பே அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்து உள்ளார்.
அப்படி இருக்கும் போது அவர் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் தூரிகை தற்போது நடத்திக் கொண்டிருக்கும் நாளிதழின் ஆண்டு விழாவை இன்னும் சில தினங்களில் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார். அதற்காக பல்வேறு பிரபலங்களை அழைக்கும் முயற்சியிலும் அவர் பிசியாக இருந்துள்ளார்.
மேலும் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் அவர் ஒரு திரைப்படத்திலும் காஸ்டியூம் டிசைனராக ஒப்பந்தமாகி இருந்தார். இதற்கிடையில் அவர் தன் நண்பர்களுடன் கடந்த மாதம் ஜாலியாக வால்பாறை சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இப்படி பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்த பெண் திடீரென்று மரணம் அடைந்திருப்பது பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது. மேலும் மகிழ்ச்சியாக சிறகடித்துக் கொண்டிருந்த தூரிகை ஏதோ ஒரு மன அழுத்தத்தின் காரணமாக தான் இப்படி ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அவரின் இந்த முடிவு அவர் குடும்பத்தினரை மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் நிலைகுலைய வைத்துள்ளது.