தேவையில்லாத ஆணியை பிடுங்கும் சேரன்.. வம்பை விலைகொடுத்த வாங்க சரத்துக்குமாருடன் கூட்டு

தமிழில் பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான சேரன் தொடர்ந்து பல படங்களை இயக்கினார். அதிலும் இவர் இயக்கிய வெற்றிக் கொடிக் கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ஆடு கூத்து உள்ளிட்ட படங்களுக்காக தலா ஒரு படம் வீதம் 4 தேசிய விருதுகளை வென்றவர். இப்படி பல படங்களை இயக்கி வெற்றி கண்ட சேரன், தொடர்ந்து பல சரிவுகளையும் சந்தித்து வந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில கசப்பான அனுபவங்களால் சேரன் சினிமாவை விட்டே விலகியிருந்தார். இதனிடையே உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் சேரன் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் ராஜாவுக்கு செக், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களை இயக்கி,நடித்து தோல்வியை சந்தித்தார்.

இதனிடையே நடிகர் சரத்குமாருடன் கூட்டு சேர்ந்து சேரன், ஒரு பயோபிக் திரைப்படத்தை எடுக்க திட்டம் தீட்டியுள்ளார். அண்மைக்காலமாக ரசிகர்களிடையே பயோபிக் படங்களுக்கென தனி வரவேற்பு உள்ளது. அதிலும் விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். பொதுவாக பயோபிக் படங்கள் என்றாலே ஏற்கனவே சாதித்து, உயிரிழந்த பிரபலங்களின் வாழ்க்கையை அறிந்து தான் படம் எடுப்பார்கள்.

உதாரணமாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் பயோபிக் வெப் சீரிஸாகவும், தலைவி என்ற படமாகவும் வெளியாகி ஹிட்டடித்தது. அந்த வகையில் இயக்குநர் சேரன் உயிருடன் இருக்கும் பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க திட்டம் தீட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும், சில கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

அதில் ஒரு கட்சி தான் பாமக, இந்த கட்சி தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்குக்கு எதிராக போராடி வருகிறது. இந்த நிலையில், அந்த கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க சேரன் ஆயத்தமாகியுள்ளார். அதற்காக ராமதாஸ் உடன் 20 நாட்கள் கூடவே இருந்து அவரைக் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளாராம்.

இந்த படத்தில் ராமதாஸின் கதாபாத்திரத்தில், தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ள நடிகர் சரத்குமார் நடிக்க தேர்வாகியுள்ளாராம். மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒருபக்கம் இயக்குனர் சேரன் பயோபிக் படத்தை இயக்கி ரீ என்ட்ரி கொடுப்பது சந்தோஷைத்தை அளித்தாலும், இப்போது தமிழக அரசியல் இருக்கும் சூழலில் இப்படம் தேவையில்லாத ஆணி என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.