வைரமுத்துவை விடாமல் துரத்தும் சின்மயி.. அந்த மாதிரி வீடியோ இல்ல, ஆடியோ ஆதாரம் இருக்கு

சினிமாவில் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இது சம்பந்தமாக நிறைய கதாநாயகிகள் வெளிப்படையாக பல விஷயங்களை கூறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இது பாடகி சின்மயி பிரச்சனை மிகவும் பெரிதாக பேசப்பட்டது.

2018 ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் மீது பாடகி சின்மயி தவரான முறையில் நடந்ததாக புகார் ஒன்றை அளித்தார். யாரும் அதனை நம்ப வில்லை காரணம் வைரமுத்து அப்படிப்பட்டவர் இல்லை என அவருக்கு ஆதரவாக பேசி வந்தனர். இருந்தாலும் சினிமா விடாப்பிடியாக வைரமுத்து மீது METOO அமைப்பின் மூலம் பல பிரச்சினைகளை தோலுரித்துக் காட்டினார். ஆனால் அது அப்படியே மறைந்து போனது.

மறுபடியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பேசி வருகிறார் சின்மயி . அவர் என்னை கட்டிப்பிடிக்கும் போது கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை ஒரே பதற்றமாக என்ன பண்ணுவது என்று தெரியாமல் நின்றேன். அந்தரங்க இடங்களை தொட்ட வீடியோக்கள் என்னிடம் இல்லை அவர் என்னை கட்டி அணைத்த போது ஏதோ தவறாக இருக்கிறது என்று மட்டும் தோன்றியது. கீழே எனது அம்மா இருந்ததால் நான் ஓடி வந்துவிட்டேன்.

இந்த பிரச்சனையை காம்ப்ரமைஸ் செய்ய ஒரு இயக்குனர் என்னிடம் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் நினைத்தால் அனைவரையும் அசிங்கப்படுத்தி அவர்களின் முகத்திரையைக் கிழிக்க முடியும். ஆனால் செய்யமாட்டேன் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். அப்படி நான் இறந்துவிட்டால் அந்த ஆடியோ எனது நண்பர்கள் மூலம் வெளியே வரும்.

செல்வி ஜெயலலிதா இருந்திருந்தால் இப்போது வைரமுத்து உள்ளே கம்பி எண்ணிக் கொண்டிருப்பார். அவர் இல்லாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அவர் இருக்கும்போது சொல்லியிருக்கலாம் ஆனால் எனக்கு அப்பொழுது அவ்வளவு தைரியம் இல்லை. மற்றும் வைரமுத்துவின் அரசியல் பலம் பல விஷயங்கள் என்னை பேச விடாமல் செய்தது. இனிமேல் எனக்கு எந்த பயமும் இல்லை துணிந்து செயல்படுவேன்.

மறுபடியும் இதனை பேசுவது அரசியல் ஆதாயத்திற்காக என்று பலபேர் கூறி வருகின்றனர் இருந்தாலும் இதில் ஏதோ உண்மை இருக்கிறது என்பது மட்டும் உறுதி. அரசியல் பிரச்சினைகளை இதனை அவ்வளவு எளிதாக வெளியே கொண்டு வருவது எளிதான விஷயமல்ல. பார்க்கலாம் சின்மயின் தைரியத்தை மேற்கொண்டு என்ன செய்வார் என்று கோலிவுட் வட்டாரங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.