தென்னிந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான சின்மயி, ஏஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதன்பிறகு இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.
இவர் பாடல்கள் பாடி பிரபலமடைந்தது விட அவ்வப்போது திரைப்படங்களை ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்க வைத்து பிரபலமானது தான் அதிகம். அதிலும் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருவருக்குமிடையே ஒரு பனிப்போரே ஏற்பட்டது.
சின்மயி பொறுத்தவரை எப்போதும் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அந்தவகையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏஆர் ரகுமான் தொடங்கி சமந்தாவின் விவாகரத்து வரை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதாவது சினிமாவில் முதல் முதலாக தனது 15-வது வயதில் பாடிய தெய்வம் தந்த பூவே பாடல் பாடும்போது மணிரத்தினம் யார் என்று தெரியாது.
ஏஆர் ரகுமான் சார் தெரியாது, ஏன் இவர்களை ஒரு முறை கூட போட்டோவில் பார்த்ததில்லை. மேலும் அந்தப் பாடல் வரிகள் எழுதிய கவிஞர் யார் என்று எனக்கு தெரியாது. அப்படி தான் அந்த பாட்டு பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பாட்டிற்கு பிறகு ஓஹோன்னு வருவேன் என்று நினைத்தார்கள்.
ஆனால் நிஜமாகவே இரண்டு வருடங்களாக எனக்கு எந்த வாய்ப்பும் வராமல் இருந்தது. இதைத்தொடர்ந்து சமந்தாவின் தோழியாக பேசிய சின்மயி, பல விஷயங்களில் உறுதுணையாகவும் உதவியாகவும் இருப்பது கணவரும் கணவர் வீட்டாரும் தான்.
ஆனால் வீட்டில் கணவனை விட ஒரு பெண் அதிகமாக சம்பாதிக்கிறார் பிரபலமாக உள்ளார் என அவர் மீது குடும்பத்தில் உள்ளவர்கள் வயிற்றெரிச்சல் படுவதால் பெரும்பான்மையான பெண்கள் வீட்டில் மனநிம்மதி இல்லாமல் இருக்கின்றனர்.
இதனால் குடும்ப வாழ்க்கைக்காகவும் வீட்டில் மன அமைதி, சாந்தி இருப்பதற்காக பெண்கள் தங்களுடைய வாழ்க்கை லட்சியம், கனவு எல்லாவற்றையும் தொலைத்து விட்டு அந்த உறவில் இருக்கவேண்டிய நிலையில்தான் இந்திய கலாச்சாரம் உள்ளது என்று சாடியுள்ளார்.
ஆனால் சமந்தாவை பொறுத்தவரை அவருடைய வாழ்வில் கடந்து வந்த பாதை, அவருடைய தன்னம்பிக்கை, தைரியம் ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டும். அவர் தற்போது பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டில ரூசோ பிரதர்ஸ் உடன் சேர்ந்து வேலை செய்ய உள்ளார்.
வாழ்க்கையில் அடுத்த கட்ட வெற்றியை சமந்தா தொட்டு, மென்மேலும் உயரவேண்டும். அவர் ஆஸ்கார் விருது வாங்கும் போது அதை நான் கைகட்டி ரசிக்க வேண்டும் என சின்மயி சமந்தாவின் விவாகரத்து முடிவு சரியானதுதான் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.