மனோஜ் இறப்பை தொடர்ந்து அடுத்த இழப்பு.. சித்தி சீரியல் புகழ் ரவிக்குமார் மரணம்

Ravikumar Passed Away: பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். கடும் அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து மீண்டும் திரை உலகில் ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நடிகர் ரவிக்குமார் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழில் மலபார் போலீஸ், அவர்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

அது மட்டும் இன்றி ராதிகாவின் சித்தி சீரியலில் ஈஸ்வர பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். அதை அடுத்து ராதிகாவுக்கு அப்பா கதாபாத்திரம் என்றாலே இவர்தான் நினைவுக்கு வருவார்.

சித்தி சீரியல் புகழ் ரவிக்குமார் மரணம்

71 வயதாகும் இவர் உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவருடைய உயிர் பிரிந்துள்ளது. அவருக்கு திரை துறையைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் ராதிகாவும் அவருக்கு தன் இரங்கல் பதிவை போட்டுள்ளார். இவர் நடிகை சுமித்ராவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment