Coolie : கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் படத்தில் அதிக வன்முறை காட்சி இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் கூலி படத்திலும் சில காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக குழந்தைகள் இந்த படத்தை பார்க்க அனுமதிக்கவில்லை. ஆகையால் பெற்றோர்களும் குழந்தைகளுக்காக கூலி படத்தை தவிர்த்து இருந்தனர். ஆனாலும் ரஜினிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆகையால் கூலி படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது கூலி படத்தின் நான்கு நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
கூலியில் நான்கு நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறது
இதனால் பெற்றோரின் அனுமதியுடன் அனைவரும் இந்த படத்தை பார்க்கலாம். ஆகையால் கூலி படத்தை இப்போது சிங்கப்பூரில் குழந்தைகள் பார்க்க எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அதேபோல் கலாநிதி மாறனும் இப்போது நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.
அதாவது கே ஜி எஃப் போன்ற படங்களுக்கும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போது கூலி படம் வசூல் வேட்டை ஆடி வருவதால் கலாநிதி மாறன் இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். அவ்வாறு கூலி படத்திற்கும் யுஏ சான்றிதழ் கிடைத்தால் அசால்டாக ஆயிரம் கோடி வசூலை பெரும்.
சிங்கப்பூர் போல விரைவில் எல்லா இடங்களிலும் குழந்தைகளை கூலி படத்துக்கு அனுமதிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் கலாநிதியின் கல்லாப்பெட்டி கிடுகிடு என உயர இருக்கிறது.