Rajini : லோகேஷ், ரஜினி கூட்டணியில் வெளியான கூலி படம் முதல் நாளே 151 கோடி வசூல் செய்ததாக அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில் நேற்றைய தினம் 4 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 404 கோடிக்கு அதிகமாக வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தது.
பொதுவாகவே தமிழ் சினிமாவில் கூலி படம் முதல்முறையாக ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. அதன்படி இப்போது ஆயிரம் கோடி வசூலை கூலி நெருங்கி விட்டதாக கூறுகிறார்கள். இதை வைத்து ப்ளூ சட்டை மாறன் பதிவு போட்டிருக்கிறார்.
அதாவது பாகுபலி, புஷ்பா, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், ஜவான் போன்ற படங்கள் ஆயிரம் கோடியை தாண்டி தியேட்டரில் மட்டும் வசூல் செய்தது. ஆனால் கூலி படம் தியேட்டரில் மட்டும் ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கு சாத்தியம் இல்லை.
கூலி படம் ஆயிரம் கோடி வசூல் சாத்தியம் இல்லை எனக் கூறிய பிரபலம்

இதன் காரணமாக கூலி படத்தின் ஆடியோ, ஓடிடி மற்றும் சேட்டிலைட் ஆகிய உரிமைகளை சேர்த்து ஆயிரம் கோடி கணக்கு காட்டுவார்கள் என்று காலையில் தான் சொன்னேன். இப்போது அது நடந்துவிட்டது. இதேபோல் பொய்யான வசூல் விபரத்தை துவக்கி வைத்தது ரெட்ரோ படம் தான்.
தற்போது கூலி படமும் இதே உருட்டை உருட்டி வருகிறார்கள். கூலி படம் ஆயிரம் கோடி வடை சுட்டதாக கூறி வருகிறார்கள் என்ற ப்ளூ சட்டை விமர்சித்து இருக்கிறது. ஆரம்பம் முதலே ரஜினி படங்களை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வருவது வழக்கம்.
ஜெயிலர் படத்தையும் கழுவி ஊற்றிய நிலையில் இப்போது கூலி படத்தையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து இந்த படத்திற்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டு வருகிறார். இதற்கு ரஜினி ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.