Lokesh Kanagaraj : லோகேஷ் ஆரம்பத்தில் இருந்தே மலையாள நடிகர்களுக்கு தனது படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக ரசிகர்கள் கொண்டாடும் படியாக அவர்களது கதாபாத்திரம் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் கைதி படத்தில் நரேன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுவும் கதையின் ஆணிவேராக அவரது கதாபாத்திரம் அமைந்தது. அடுத்ததாக விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமராக நடித்திருந்தார் பகத் பாசில்.
தமிழ் சினிமாவில் பகத் பாசிலுக்கு ஒரு நல்ல ஓப்பனிங் ஆக விக்ரம் படம் அமைந்தது. இதைத்தொடர்ந்து லியோ படத்தில் விஜய்யின் மகன் சித்துவாக நடித்திருந்தார் மேத்யூ தாமஸ். இவருக்கும் ஒரு நல்ல என்ட்ரியாக லியோ படம் அமைந்தது.
மலையாள நடிகர்களுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கும் லோகேஷ்
இதைத்தொடர்ந்து தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திலும் முக்கியமான மலையாள நடிகரை இறக்கி இருக்கிறார். அதாவது தயாள் என்ற கதாபாத்திரத்தில் சௌபின் ஷாகிர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக பூஜா ஹெக்டே உடன் மோனிகா பாடலில் அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் கூலி பட விழாவில் ரஜினி சௌபினை பாராட்டி பேசியது பலரது கவனத்தையும் பெற்றது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்திலும் அவரது நடிப்பு அற்புதமாக இருந்தது. தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். லோகேஷ் வரும் காலங்களில் இதே போல் நிறைய மலையாள நடிகர்களை தன்னுடைய படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்த இருக்கிறார்.