விக்ரம், தேவாவை இணைக்கும் லோக்கி.. அடுத்த சம்பவம் ரெடி

Lokesh Kanagaraj : சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான கூலி படம் வசூல் வேட்டையாடி வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் கிட்டத்தட்ட 404 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு அடுத்தபடியாக கார்த்தியின் கைதி 2 படத்தை லோகேஷ் எடுக்க இருக்கிறார். இதுதவிர விக்ரம் 2, ரோலக்ஸ், அமீர்கானின் படம் என லோகேஷ் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. ஆனால் இதனிடையே இரண்டு இமயமலைகளையும் இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அதாவது சமீபத்தில் ரஜினி மற்றும் கமல் இருவரையும் சந்தித்து ஒரு டூயல் ஹீரோ சப்ஜெக்ட்டை கூறி இருக்கிறார். இருவருமே இந்த படத்தில் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். மேலும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க இருக்கிறது.

கமல், ரஜினியை வைத்து லோகேஷ் போட்ட திட்டம்

ஆகையால் கமல், ரஜினி மற்றும் லோகேஷ் ஆகியோரின் கால்ஷீட் சரியாக அமைந்தால் விரைவில் அறிவிப்பு வெளியாகும். பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இருவரையும் ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இதற்கு முன்னதாக இயக்குனர் ராஜமௌலியும் இராமாயணம் போன்ற கதையில் இருவரையும் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக இருவரும் நேர் எதிராக மோதிக் கொள்ளும்படி நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாம்.

இதனால் ராஜமவுலி, லோகேஷ் யார் இந்த இருவரையும் முதலில் வைத்து படம் எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் கண்டிப்பாக இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தின் பிசினஸ் அமோகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.