ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் கருப்பு. இந்த படம் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என ஆரம்பத்தில் நாள் குறிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அதற்கு நாள் கூடி வரவில்லை
படம் இன்னும் முழுவதுமாக முடிக்கவில்லை. முடித்த பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு எப்படியும் மூன்று மாதங்கள் ஆகும். அதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு இது 90% சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. அதுவும் போக இந்த வருட படங்களை எல்லாம் ஏற்கனவே பட்டியலிட்டு முடித்து விட்டது ஓடிடி நிறுவனங்கள்.
இது 2026 பொங்கல் தினத்தன்று வெளிவருகிறது ஏற்கனவே உங்களுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படமும் ரிலீஸ் ஆக உள்ளது. அதாவது ஜனவரி ஒன்பதாம் தேதி பராசக்தியும் 14ஆம் தேதி ஜனநாயகனும் ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுள்ளனர்.
இப்பொழுது இந்த இரண்டு படத்தோடு சூர்யாவின் கருப்பு படமும் சேர்ந்துள்ளது. அதனால் மூன்று படங்கள் என 2026 பொங்கல் கலை கட்டுகிறது. இதில் விஜய்யின் ஜனநாயகன்படத்துடன் மோதுவதால் சூர்யாவிற்கு எந்த ஒரு சங்கோஜமும் இல்லை, ஆனால் கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு மட்டும் சற்று தயக்கத்தில் இருக்கிறார்.
ஜப்பான் படத்தை தயாரித்த எஸ் ஆர் பிரபுவிற்கு ஒரு கட்டத்தில் 45 கோடிகள் பைனான்ஸ் பண்ணியது ஜனநாயகன் படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் தான். இதனால் அந்த நிறுவனம் தயாரித்த படத்துடன் போட்டி போடுவதாயென எஸ் ஆர் பிரபு தயக்கத்தில் இருக்கிறார்.