தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத படைப்பாக எழுத்தாளர் வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் விளங்குகிறது. பொன்னியின் செல்வன் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த இந்த நாவல், வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் பெருமையை வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில், ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழாவில் பேசிய ஷங்கர், தனது கனவு திட்டத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
என்னுடைய முதல் கனவு படம் எந்திரன் அதை நிறைவேற்றி விட்டேன். இப்போது எனது கனவாக வேள்பாரி உருவாக உள்ளது என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
ஷங்கரின் கனவு பழிக்குமா?
இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் அடுத்த படமாக புகழ்பெற்ற “வேள்பாரி” நாவலை அடிப்படையாகக் கொண்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் தோல்வியால் கமல் இதில் நடிக்க மறுத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் ஷங்கரை தூக்கி விட ரஜினி எடுத்த முடிவு என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏனெனில் தனது கேரியரை மீண்டும் உயர்த்தக் கூடிய ஒரே நபர் ரஜினிதான் என்று ஷங்கர் நம்புகிறார். அதிலும் முக்கியமாக இந்த படத்தின் மூலமாக ரஜினியின் மார்க்கெட் சரிந்து விடக்கூடாது என்றும் ரஜினியின் ரசிகர்களுக்கிடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் தமிழ் சினிமாவுக்கே ஒரு வரலாற்று நிகழ்வாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.