தமிழ் படங்கள் 1000 கோடி கண்டிப்பா அடிக்காது.. AR முருகதாஸ் சொன்ன காரணம்

Cinema : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை அனைத்து நுணுக்கங்களையும் கற்று தேர்ந்து, சினிமாவிலையே ஊறிப்போனவர்களும் உள்ளனர்.

ஆனால் அவர்களால் கூட செய்ய முடியாத சில விஷயங்களை தற்போது வந்த புது இயக்குனர்கள் அசால்ட்டாக செய்துவிடுகின்றனர். இப்போதுள்ள இயக்குனர்கள் எல்லாம் சிறு குழைந்தைகள் வரை ரீச் ஆகியுள்ளனர்.

தமிழ் படங்கள் 1000 கோடி கண்டிப்பா அடிக்காது..

இப்போதல்லாம் ஒருபடம் ரீலீஸானால் அந்த படத்தின் கதையை பற்றி யாரும் மையப்படுத்தி பேசுவதில்லை, இந்தப்படத்தை மக்கள் எத்தனை நாட்கள் விரும்பி பார்க்கிறாரார்கள் என்று கூட பார்ப்பதில்லை. இந்த படம் எத்தனை கோடி வசூலாகும் என்றுதான் பார்க்கிரார்கள்.

மக்களுக்கு பிடித்த படம் எடுக்க வேண்டும் என்ற காலம் போய். காசு போட்ட தயாரிப்பாளருக்கு மும்மடங்கு லாபம் தரவேண்டும். அதன் மூலம் நாம் வருவாய் ஈட்ட வேண்டும் என்றுதான் யோசிக்கிறார்கள். சினிமா நல்ல கருத்துக்களை முன்வைக்கவேண்டும், நல்ல சமுகத்தை உருவாக்க வேண்டும் என்றில்லாமல் சினிமா பிசினஸ் ஆகிவிட்டது என்று பரவலாக பேசிக்கொள்கிறார்களாம்.

ஆனால் தற்போது AR முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் ஒரு தகவலை அளித்துள்ளார். அதாவது தமிழ் படங்கள் 1000 கோடி அடிப்பது கடினம். ஏனென்றால், தமிழ் படங்கள் என்றுமே நல்ல கருத்துக்கள் கொண்டவை, படங்கள் மூலம் சமுதாயத்தில் உள்ள பிழைகளை சரி செய்பவை.

மற்ற மொழி படங்கள் மக்களை ரிலாக்ஸ் பண்ணுகின்றன. ஆனால் தமிழ் மொழி படங்கள் மக்களை நல்ல முறையில் சீர்திருத்த, நல்ல சமுதாயம் அமைய,சரியான முறையில் வாழ்க்கையை வாழ கற்பிக்கின்றன. இதனால் மற்ற மொழி படங்களுக்கு 1000 கோடி சுலபம் என்றும், தமிழ் மொழி படங்கள் 1000 கோடி அடிக்க அதிகமாக வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார் AR முருகதாஸ்.