இனிமேல் சினிமா எனக்கு கனவாகி விடும்.. கடைசியாக டாப் நடிகருடன் ஜோடி போடும் சமந்தா

சமந்தா இப்பொழுது கேரியரின் உச்சத்தில் இருக்கிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் சமீபத்தில் வெளிவந்த யசோதா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. சோலோ ஹீரோயின் ஆக ஆக்சனில் மிரட்டியிருந்த சமந்தாவுக்கு அந்த படம் மிகப்பெரும் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.

அதைத்தொடர்ந்து அவர் நடித்து வரும் குஷி திரைப்படம் தான் அவருடைய கடைசி திரைப்படம் என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளிவந்துள்ளது. தற்போது சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா குஷி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த அந்த படம் சூட்டிங் இன்னும் 40 சதவீதம் மீதி இருக்கிறது.

இதற்கிடையில் சமந்தா மையோசிடிஸ் என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அதனால் அவர் விரைவில் குணமடைந்து வருவதற்காக பட குழுவினர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமந்தா தன் உடல் நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அடுத்ததாக கமிட்டாகி இருந்த படங்களுக்காக வாங்கி இருந்த அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

அதிலும் ஹிந்தி படங்களில் அவர் நடிக்க இருந்த வாய்ப்பையும் இப்போது வேண்டாம் என்று மறுத்து இருக்கிறார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவர் யசோதா படப்பிடிப்பில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்தார். அதன் காரணமாகவே இப்போது அவர் நிறையவே சிரமப்பட்டு கொண்டிருக்கிறார். அதனால் டாக்டர்கள் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.

அதை ஏற்றுக் கொண்ட சமந்தாவும் கடைசியாக விஜய் தேவரகொண்டா உடன் நடித்து வந்த குஷி படத்தை முடித்துவிட்டு நடிப்புக்கு குட்பை சொல்லும் முடிவில் இருக்கிறாராம். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் இந்த படம் குறித்து வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

ஆனால் எதிர்பாராத விதமாக சமந்தா இந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு சமந்தா என்ன சொல்ல போகிறார் என்பதை அறிய அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.