Rajini: ஆரம்பத்தில் ரஜினிக்கு சினிமாவில் வில்லன் வாய்ப்பு கிடைத்த பொழுது, அவருடைய அசாத்தியமான நடிப்புத் திறமையால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்து சூப்பர் ஸ்டாராக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.
அப்பொழுது அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவரை ரசிகர்கள் பலரும் நீங்கள் அரசியலில் கால் தடம் பதிக்க வேண்டும். அதன் மூலம் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று பலர் வற்புறுத்தி வந்தார்கள். அதனாலேயே என்னமோ திடீரென்று ரஜினிக்கும் அரசியலில் நிற்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது.
அப்படி 1996 இல் ரஜினிக்கு எல்லாமே கூடி வந்தது. கிட்டத்தட்ட 90 சதவீதம் ரஜினி தான் முதலமைச்சர் என்கிற மாதிரி முடிவாகியது. இன்னும் சொல்லப் போனால் அவர் முதலமைச்சர் சீட்டில் போய் அமர்வது தான் பாக்கியாக இருந்தது. மற்றபடி ரசிகர்களிடமிருந்து ஏக போக வரவேற்பு இவருக்கு கிடைத்தது. இப்படி ஒரு பக்கம் ரஜினிக்கு அமோக வரவேற்பு இருந்தாலும் சக நடிகர்களிடமிருந்து எந்தவித ரெஸ்பான்ஸ் வராமல் போய்விட்டது.
அதாவது இவர் அரசியலில் நிற்கப் போகிறார் என்ற செய்தி வெளியான பொழுது இவரிடம் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து எந்தவித பேச்சும் வராமல் அப்படியே நின்று போய்விட்டது. அத்துடன் சக நடிகர்களும் இவருக்கு எந்தவித சப்போர்டும் கொடுக்கவில்லை. அரசியலுக்கு ஒரு துளி கூட உதவி பண்ணுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை.
அதனாலேயே ரஜினியிடம் பேசுவதை மொத்தமாக நிப்பாட்டி வந்தார்கள். ரஜினி போன் பண்ணாலும் அதையும் எடுத்துப் பேசும் அளவிற்கு யாருக்கும் தைரியம் இல்லை. அதற்கு என்ன காரணம் என்றால் அப்பொழுது ஆட்சியில் இருந்து அதிகாரம் பண்ணவர்களை பகச்சிக்க முடியாத காரணத்தினால் இந்த மாதிரி வேலைகளை செய்துள்ளார்கள்.
ஒருவேளை இவர்கள் எல்லாம் அப்பொழுதே ரஜினிக்கு சப்போர்ட் செய்திருந்தால் கண்டிப்பாக இப்பொழுது ஒரு பதவியிலிருந்து பல நல்ல விஷயங்களை செய்து சாதித்து காட்டி இருப்பார். ஆக மொத்தத்தில் ரஜினி கூடவே இருந்து பலரும் அவருடைய முதுகில் குத்தி துரோகம் செய்திருக்கிறார்கள்.