தோல்வியை ஒப்புக் கொண்ட கோப்ரா படக்குழு.. முன்னாடியே இத பண்ணியிருந்தா தல தப்பி இருக்கும்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோப்ரா. மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள கோப்ரா திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் படக்குழுவினர் என்ன செய்வது என தெரியாமல் பல்வேறு விதமான யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை சொல்லப்போனால் தெய்வத்திருமகள் படம் மட்டுமே ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதன் பிறகு வெளியான படங்கள் எதுவுமே கலவையான விமர்சனங்களை வரவேற்பு பக்கம் செல்லவில்லை என்று தான் கூற வேண்டும்.

விக்ரமின் மீது உள்ள நம்பிக்கையால் தான் கோப்ரா படத்திற்கு ரசிகர்கள் சென்றனர். அதே அளவிற்கு படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். காரணம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் கண்டிப்பாக கோப்ரா திரைப்படம் சிறப்பாக இருக்கும் என பலரும் நினைத்தனர்.

ஆனால் விக்ரமின் நடிப்பும் அஜய் ஞானமுத்து இயக்கம் சிறப்பாக இருந்தாலும் கதையின் நீளம் அதிகமாக இருந்ததன் காரணமாக ரசிகர்கள் யாரும் திரையரங்கில் பார்த்து ரசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கோப்ரா திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 நொடி என்ற கணக்கில் படத்தை எடுத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் திரையரங்கில் படத்தின் நீளத்தைகுறைக்குமாறு கூறினர்.

தற்போது கோப்ரா படக்குழுவினர் படத்தில் 20 நிமிட காட்சிகளை நீக்கி விட்டதாகவும் அதனால் படத்தின் விறுவிறுப்பு சற்றும் குறையாது எனவும் அனைவரும் கோப்ரா படத்திற்கு ஆதரவு தருமாறு வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

cobra
cobra

ஆனால் கோப்ரா படத்தின் கதை இயக்கம் நடிப்பு என அனைத்துமே சிறப்பாக தான் இருக்கிறது. தற்போது கோப்ரா படத்தின் நீளத்தை குறைக்க படக்குழுவினர் ஆரம்பத்திலேயே படத்தினுடைய நீளத்தைக் குறைத்திருந்தால் இப்படி வெளிப்படையாக அறிக்கை விட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என பலரும் கூறி வருகின்றனர்.