Sasikumar : சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. என்டர்டைன்மென்ட் கலந்து எதார்த்தமான ஒரு படத்தை இயக்குனர் கொடுத்து வெற்றி கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்துடன் வெளியான ரெட்ரோ படம் வசூலில் திணறியது. இதற்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வரவேற்பும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சூழலில் இந்த படத்தின் வசூல் விவரம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதாவது இந்த படம் 50 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அஜித்தின் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் 152 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து இந்த வருடம் வெளியான படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது.
50 நாளில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்த வசூல்
அடுத்ததாக விடாமுயற்சி மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ஆகிய படங்கள் 80 கோடியை தாண்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இப்போது மூன்றாவது இடத்தை டூரிஸ்ட் ஃபேமிலி 62.5 கோடி வசூல் செய்து பிடித்திருக்கிறது.
இதை தொடர்ந்து நான்காவது இடத்தில் விஷாலின் மதகஜ ராஜா படம் 53.45 கோடி மற்றும் ரெட்ரோ படம் 51 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த வருடம் வெளியான படங்களில் மூன்றாவது இடத்தை டூரிஸ்ட் ஃபேமிலி தக்க வைத்திருக்கிறது.
மேலும் இப்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியான நிலையில் அதிலும் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. நல்ல கதை அம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.