பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட லியோவின் தற்போதைய 10 நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Leo 10th Day Collection: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான லியோ படம் வெளியானது. அதுவும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தனர். அதேபோல் சொன்ன தேதியில் லோகேஷ் படத்தை தயார் செய்து விட்டார்.

அதன்படி திரையரங்குகளில் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. காரணம் முதல் பாதி தாறுமாறாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 148 கோடி என அதிர்ச்சி தகவலை லலித் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக நாளுக்கு நாள் லியோ படத்தின் வசூல் அதிகமாகி கொண்டு தான் போகிறது. அந்த வகையில் பத்தாவது நாளில் லியோ படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. அதாவது லியோ படம் கலவையான விமர்சனங்களால் சில தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டு உள்ளது. அதுவும் தீபாவளிக்கு நிறைய படங்கள் வெளியாகுவதால் அந்த படங்களை தான் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனாலும் லியோவின் வசூலை பார்த்தால் தலையை சுற்ற வைக்கிறது. அதன்படி இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 271 கோடி லியோ படம் வசூல் செய்து இருக்கிறது. அதேபோல் வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 229 வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஆகையால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 கோடி வசூல் செய்திருக்கிறது.

அதுவும் பத்தே நாட்களில் 500 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை லியோ படம் பெற்றிருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று இப்போது சினிமா விமர்சகர்கள் ஆராய ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால் தியேட்டர்கள் குறைக்கப்பட்டாலும் வசூல் இந்த அளவுக்கு வருகின்றது என்றால் இதில் ஏதோ குளறுபடி நடந்து இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் வேண்டுமென்றே படம் அதிக வசூல் செய்துள்ளதாக பொய்யான கணக்குகளை வெளியிடுகிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. ஆகையால் லியோ படத்தின் வசூலை நம்புவதா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்படியே போனால் லியோ ஆயிரம் கோடி வசூல் என்று கூட சொல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.