எதுவும் செட்டாகலை, டிராக்கை மாத்தும் சந்தானம்.. இனிமே இப்படித்தான்னு, வடக்குப்பட்டி ராமசாமி எடுக்கும் அவதாரம்

சந்தானம் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு திரும்பினார். திருப்பதி போனால் திருப்பம் ஏற்படும் என்பது போல் சந்தானம் புதிய திருப்பம் ஒன்றை நிகழ்த்தப் போகிறார். ஆரம்பத்தில் காமெடி பண்ணி வந்த சந்தானத்தின் இடத்தை இப்பொழுது கிட்டத்தட்ட யோகி பாபு பிடித்துவிட்டார்.

2008 ஆம் ஆண்டு வெளிவந்த அறை எண் 305 ல் கடவுள் என்ற படத்தில் அவருக்கு முதன்மை கதாபாத்திரம் கிடைத்தது அதிலிருந்து அவருக்கு ஹீரோ ஆசை துளிர்விட்டு கொண்டே இருந்தது. அதன் பின்னும் காமெடி கதாபாத்திரங்கள் நடித்து வந்த அவருக்கு பிரேக் கொடுத்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா.

இந்த படத்தில் இருந்து இனிமே இப்படித்தான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று தொடர்ந்து ஹீரோவாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் சந்தானம். அப்படி ஹீரோவாக அவதாரம் எடுத்த இவருக்கு நிறைய படங்கள் ஹிட்டானது. அதன் பின் சமீபகாலமாக இவருக்கு ஹீரோ கதாபாத்திரம் கை கொடுக்கவில்லை.

தில்லுக்கு துட்டு 2 ஆம்பாகம், படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பின்னர் மொத்தமாய் தனது டிராக்கை மாற்ற போகிறார் சந்தானம். சிம்பு, தனுஷ், ஆர் ஜே பாலாஜி போல் இவரும் படங்களை இயக்கப் போகிறாராம் அதற்காக கதையை கூட ரெடி பண்ணி விட்டாராம் சந்தானம்.

நாம் பார்த்து வளர்ந்த நடிகர்கள் எல்லோரும் இப்பொழுது இயக்குனர் ஆகிவிட்டார்கள் என சந்தானமும் இப்பொழுது டைரக்ஷன் பண்ண போகிறார். தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்துக்கு பின்னர் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டி கே உடன் ஒரு படம் பண்ணுகிறார். அதற்குப் பிறகு முழு நேர டைரக்டராக மாறுகிறார்.

Leave a Comment