ஆரம்பத்தில் விஜய் சேதுபதி திரையில் இருக்கிறாரா என்பது கூட தெரியாத ரசிகர்கள் தற்போது அவரின் முகத்தை பார்த்த உடனே ஆர்ப்பரிக்கின்றனர். அவ்வாறு அடித்தட்டில் இருந்த தனது கடின உழைப்பின் காரணமாக தற்போது தனக்கான இடத்தை விஜய் சேதுபதி பிடித்துள்ளார்.
இதனால் சிறு நடிகர்களின் கஷ்டம் விஜய் சேதுபதிக்கு நன்றாகவே தெரியும். இதனால் யார் உதவி கேட்டு வந்தாலும் தன்னால் முடிந்தவரை கொடுத்து விஜய் சேதுபதி உதவி செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது காமெடி நடிகர் ஒருவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற வருகிறார்.
ஆனால் சிகிச்சைக்கு போதுமான அளவு வசதி இல்லாததால் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் அவர் உதவி கரம் கேட்டிருந்தார். பாக்யராஜ் படத்தின் மூலம் அறிமுகமானவர் போண்டாமணி. தொடர்ந்து இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இப்போது போண்டாமணியின் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். இந்நிலையில் மாற்று அறுவை சிகிச்சைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலும் இவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் போண்டாமணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் செய்தி விஜய் சேதுபதியின் காதுக்கு வந்தவுடன் அவரது வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் போட்டுள்ளார். இதற்கு போண்டாமணி எனக்கு ஒரு லட்சம் பணம் போட்டு விட்டது விஜய் சேதுபதி ஒரு கோடி கொடுத்ததுக்கு சமம் என நன்றியை தெரிவித்துள்ளார்.
போண்டாமணி நடித்த படங்களில் உள்ள ஹீரோக்களே இவருக்கு உதவ முன் வராத நிலையில் விஜய் சேதுபதி உதவியது பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபனும் போண்டாமணிக்கு தேவையான உதவிகளை கேட்டு செய்து வருகிறாராம்.