வாய்ப்பின்றி தவிக்கும் நடிகர்.. மொட்ட ராஜேந்திரனை தொடர்ந்து கஷ்டப்படும் தரமான காமெடியன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முக்கிய காமெடி நடிகர்களாக வலம் வந்த சில நடிகர்களை தற்போது படத்தில் காண முடியவில்லை. அதில் ஒருவர்தான் மொட்ட ராஜேந்திரன். நான் கடவுள் படத்தில் தாண்டவன் கதாபாத்திரத்தில் கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அவரை பாஸ் என்ற பாஸ்கரன் படம் வேறு பாதைக்கு அழைத்து சென்றது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, டார்லிங் போன்ற பல படங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

மொட்டை ராஜேந்திரன் போன வருஷம் வரிசையாக எக்கச்சக்க படங்கள் நடித்து இருந்தார். அதிலும் முக்கியமான கதாபாத்திரங்களை இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இவரை அதிகமாக படங்களில் பார்க்க முடியவில்லை. அப்படியே நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது மொட்ட ராஜேந்திரன் போல் பிரபல காமெடியன் ஒருவரும் பட வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இயக்குனர், குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக என பல பரிமாணங்களைக் கொண்டவர் தம்பி ராமையா. இவர் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கியிருந்தார்.

தம்பி ராமையா மைனா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். இதைத்தொடர்ந்து தம்பி ராமையா சாட்டை, கும்கி, ஜில்லா, வீரம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

இவருடைய மகன் உமாபதி சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அவரும் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தம்பி ராமையா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது பட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார்.