சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

Kamal In 234 Movie: கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பின் மணிரத்தினம் கமல் கூட்டணியில் மறுபடியும் ஒரு படம் உருவாகிறது. அதாவது கமலின் 234 படத்தை பிரம்மாண்டமாக இயக்கப் போகிறார் மணிரத்தினம். அந்த வகையில் இவர்களுடைய காம்போவில் வரக்கூடிய படம் எப்படி இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்து வருகிறார்கள். மேலும் இப்படத்தை ஏஆர் ரகுமான் இசையமைக்க போகிறார்.

அத்துடன் கமல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படத்தைப் போல இப்படத்தையும் மல்டி ஸ்டார் படமாக எடுக்க போகிறார்கள். அதன்படி இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் சிம்பு அவருடைய 48வது படத்தில் ரொம்பவே பிஸியாக இருப்பதால் இந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார்.

ஆனால் அதற்கு பதிலாக இந்த முக்கியமான ரோலில் நடிப்பதற்கு மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் இவருக்கு கலெக்டர் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழில் முன்னணி ஹீரோவாக வர வேண்டும் என்று முழுமூச்சாக துல்கர் சல்மான் செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே இது சம்பந்தமாக மம்முட்டி கமலிடம் பேசி இருக்கிறார். அதாவது மலையாளத்தில் என்னதான் துல்கர் பெரிய ஹீரோவாக பெயர் பெற்றாலும், தமிழில் அவர் வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்பதன் என்னுடைய மிகப்பெரிய ஆசை என்று கூறி இருக்கிறார். இவர் ஆசையை நிறைவேற்றும் விதமாக கமல் இந்த வாய்ப்பை சரியான நேரத்தில் துல்கருக்கு கொடுத்திருக்கிறார்.

ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் என்பதற்கு ஏற்ப மம்முட்டி ஆசையும் நிறைவேற்றுகிற மாதிரி ஆகிவிட்டது. இவருடைய கதாபாத்திற்கு ஏற்ற ஒரு ஹீரோவையும் நடிக்க வைத்து விட்டார். இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிகை திரிஷாவும் கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது.

இதனை தொடர்ந்து மறுபடியும் மணிரத்தினம் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக வெற்றியாக தான் இருக்கப் போகிறது. ஆக மொத்தத்தில் கமல், மணிரத்தினம், துல்கர், த்ரிஷா மற்றும் ஏஆர் ரகுமான் இவர்கள் அனைவரும் சேர்ந்து பிரம்மாண்டமான வெற்றியை கொடுக்கப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் இப்படத்திற்கான அபிஷியல் டைட்டில் அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப் போகிறார்கள்.