Thalapathy-68 Movie: லோகேஷ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தை நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார். இப்படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகப் போகிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் நடிக்கப் போகிறார், மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போகிறார்.
மேலும் இதில் விஜய், அப்பா மகன் என இரண்டு கேரக்டர்கள் இருப்பதால் அப்பா விஜய்க்கு சிறந்த நடிகையை தேர்ந்தெடுக்கும் படலத்தில் பல நடிகைகளிடம் பேசி வருகிறார்கள். அத்துடன் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 90களில் சாக்லேட் பாயாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கான இடத்தை கட்டி காப்பாற்றி வந்த நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆரம்பக் கட்டத்தில் விஜய், அஜித்துக்கு இவர் தான் சரியான போட்டியாய் நின்னு மெகா ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார். அந்த வகையில் முன்னணி நடிகர் என்ற பட்டத்தை பெற்று வந்த இவர் திடீரென்று சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார். அதன் பின் மறுபடியும் தன்னை ரசிகர்களிடம் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டு வருகிறார்.
ஆனாலும் எந்த விதத்திலும் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை விட்டு விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்படிப்பட்ட இவரிடம் தளபதி 68 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என்று படக்குழு கேட்டிருக்கிறது. அதன் பின் நன்றாக யோசித்து இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் கொடுத்திருக்கிறார்.
இதுவரை நான் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன், இல்லையென்றால் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று சுற்றித்திரிந்த இவரிடம் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தளபதி 68 படத்தில் நடிக்கும்படி ஆகிவிட்டது. அதற்கு இன்னொரு காரணம் விஜய் படத்தில் நடித்தால் நம்முடைய வளர்ச்சி அதிவேகமாக மக்களிடம் ரீச் ஆகிவிடும் என்ற ஒரு நினைப்பு தான்.
அதனால் தான் இவருடைய கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு விஜய்யின் நண்பராக நடிக்கப் போகிறார். அவர் வேறு யாருமில்லை 90களில் டாப் ஸ்டார் ஆக ஜொலித்த பிரசாந்த் தான். இவர் தளபதி 68 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார். ஆனால் எந்த மாதிரியான ஒரு கேரக்டர் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.