இப்பொழுது தயாரிப்பு சங்கத்தில் நடிகர் ஒருவர் மீது கம்ப்ளைன்ட் சென்றுள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்த புகாரை கொடுத்துள்ளனர். படத்தை ஒப்புக்கொண்ட ஹீரோ சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என அவரின் மீது குற்றச்சாட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோ தரப்பு அவர் பக்கத்தில் உள்ள நியாயத்தை கூறி வருகிறது.
படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரித்தும் வருபவர் விஷ்ணு விஷால் 2009ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதன் பின் தொடர்ந்து நடித்து ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்தும் வந்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், எஃப் ஐ ஆர், கதாநாயகன் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார்.
முக்கியமா இவருக்கு காமெடி கலந்த கதாபாத்திரங்கள் சற்று கை கொடுக்கும். அந்த வகையில் முண்டாசுப்பட்டி, சிலுக்குவார் பட்டி சிங்கம், கதாநாயகன், கட்டாகுஸ்தி போன்ற படங்கள் இவரை தூக்கி விட்டது. நடிகராக ஓரளவு உங்களுக்கு மோசம் இல்லாமல் படங்களில் நடித்து பெயரை காப்பாற்றி வந்தார்.
இப்பொழுது இவரை வைத்து சூப்பர் குட் பிலிம்ஸ் ஒரு படத்தை தயாரித்து வருகிறார்கள். ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் தான் அந்த படத்தில் இயக்குனர். 80 நாட்கள் கால் சீட் வாங்கிவிட்டு 120 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறார் என்பது தான் விஷ்ணு விஷாலின் குற்றச்சாட்டு.
மீதமுள்ள நாட்களுக்கு சம்பளம் வேண்டும் என கேட்டு படப்பிடிப்புக்கு வர மறுக்கிறாராம். இதனால் தான் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் செய்துள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷால் கவரிமான் பரம்பரை, மோகன்தாஸ் போன்ற படங்களை தயாரித்து வந்தார், ஆனால் இயக்குனர்களுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சனையால் பல கோடிகள் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை என்று படத்தை குப்பையில் போட்டு விட்டார்.