வாரிசை விட மிகக் குறைவான நேரத்தில் முடிக்கப்பட்டது துணிவு.. ஆபத்தாக அமையும் நெடு நீளப் படங்கள்

சமீபகாலமாக வெளியான படங்களில் அதிகம் தோல்வியடைந்த படங்களை எடுத்துப் பார்த்தால் படத்தின் நீளம் அதிகமாக உள்ளது. அதனால் தான் விக்ரமின் கோப்ரா படம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டது. ஏனென்றால் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக படம் எடுத்தால் அது எமனாக மாறி வருகிறது.

அதிக நேரம் தியேட்டரில் அமர்ந்து படத்தைப் பார்க்க ரசிகர்கள் எரிச்சல் அடைகின்றார்கள். ஏற்கனவே விஜயின் பீஸ்ட் படம் அதிக நேரம் இருந்தது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அவதார் 2 படத்தின் நீளமும் கிட்டத்தட்ட மூன்றே முக்கால் மணி நேரம் தியேட்டரில் செலவிட வேண்டி இருந்தது.

இவ்வாறு படத்தின் நேரம் அதிகமாக இருப்பதன் காரணமாக ரசிகர்கள் பலரும் ஓடிடியை தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் நமக்கு தேவையான நேரத்தில் படத்தை பார்த்துக் கொள்ளலாம். இந்நிலையில் பெரிய நடிகர்களின் படங்களும் இதே பிரச்சனையை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு மோதிக்கொள்ள இருக்கிறது. இதில் வாரிசு படம் இரண்டே முக்கால் மணி நேரம் எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆக்க்ஷனை குறைத்துக் கொண்டு சென்டிமென்ட் ஆக நடித்துள்ளார்.

மேலும் வாரிசு படத்தை விட குறைவான நேரத்தில் தான் துணிவு படாததை வினோத் எடுத்துள்ளார்.அதாவது அஜித்தின் துணிவு படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் மட்டும்தான். இதனால் ரசிகர்களுக்கு ஒரு தொய்வு ஏற்படாது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே வலிமை படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் சில காட்சிகள் கட் செய்யப்பட்டது. ஆகையால் வினோத் முன்கூட்டியே இந்த படத்தின் நீளத்தை குறைத்து உள்ளார். மேலும் வாரிசு படமும் ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படம் என்பதால் நேரம் அதிகமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படாது என கூறுகின்றனர்.