பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக இருக்கும் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல இடங்களிலும் இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் காரணமாகவே இவருடைய திரைப்படங்கள் வெளியானால் அது திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்படித்தான் நேற்று வெளியான வாரிசு திரைப்படத்தையும் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். ஆனால் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களிலேயே வாரிசு படத்தை பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக பரவ ஆரம்பித்தது. அதிலும் தன்னை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு பேசும் பலரும் படம் நல்லா இல்லை என்று கூறியது தான் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
அதைத்தொடர்ந்து யூடியூப் சேனல்கள் மூலம் விமர்சனங்கள் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் படத்தை பற்றிய மோசமான விமர்சனங்களை கொடுத்தனர். அதிலும் பயில்வான் ரங்கநாதன் ஒற்றை வார்த்தையில் வாரிசு படத்தை விமர்சனம் செய்ததோடு முடித்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து வெப் ஸ்பீச் பிரபலங்களும் வாரிசு படத்தை படுமோசம் என்று முத்திரை குத்தி இருந்தார்கள். இதுபோன்று நானும் படத்தை ரிவ்யூ செய்கிறேன் என்ற பெயரில் ஒரு கூட்டமே சதி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இது படத்திற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இப்போது ஒரு படத்தை பார்க்கலாமா, வேண்டாமா என்பதை ரசிகர்கள் பலரும் இது போன்ற விமர்சனங்களை கேட்டு விட்டு தான் முடிவு எடுக்கின்றனர். அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் தற்போது நேர்மைக்கு புறம்பாக விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் வாரிசு படத்தை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்திருப்பது அவர்களுக்கு விஜய் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. ஏனென்றால் விஜய் தான் இப்பொழுது நம்பர் ஒன் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கட்டுக்கதைகளும் கிளம்பியது. இது விஜய்யின் கவனத்திற்கு வந்ததா என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் விஜய்யின் பிராண்டை உடைப்பதற்காகவே இப்போது பல வேலைகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதன் முன்னோட்டமாக தான் இப்போது வாரிசு படத்தின் விமர்சனங்கள் பார்க்கப்படுகிறது.
அதாவது படத்தை பார்த்த பலரும் தங்கள் நிஜ வாழ்க்கையோடு இந்த கதையை கனெக்ட் செய்ய முடிகிறது என்று கூறுகின்றனர். அப்படி இருக்கும்போது பல விமர்சகர்கள் இந்த படத்தை எதற்காக மோசமான படம் என முத்திரை குத்தி வருகிறார்கள் என்ற கேள்வி தான் இப்போது எழுந்து வருகிறது. இது ரிவ்யூ என்ற பெயரில் வாரிசுக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகம் என்று மட்டும் தெரிகிறது. என்னதான் முயன்றாலும் தற்போது படத்தை பார்த்த ஆடியன்ஸ் நேர்மையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதுவே வாரிசு படத்தை கொண்டாட வைத்திருக்கிறிருக்கிறது.