நடிகர் பிரகாஷ்ராஜ் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் பட்டையை கிளப்ப கூடியவர். சமீபத்தில் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் ஆனதில் மீண்டும் முத்துப்பாண்டியாக கெத்து காட்டி வந்தார் பிரகாஷ்ராஜ். அதோடு என்னை பொருத்தவரையில் கில்லி படத்தில் நான் தான் ஹீரோ என்று கூறியிருந்தார்.
இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி இருந்தனர். இப்போது பிரகாஷ்ராஜ் செய்த காரியத்தால் அவர் மீது கடும் எதிர்ப்பது கிளம்பி இருக்கிறது. அதாவது 1994 ஆம் ஆண்டு லலிதா என்ற நடிகையை பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேக்னா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
மனைவிக்கு முத்தம் கொடுத்த பிரகாஷ்ராஜ்

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு லலிதா மற்றும் பிரகாஷ்ராஜ் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது. இதை அடுத்து 2010ல் தனது 45 ஆவது வயதில் நடன இயக்குனர் போனி வர்மாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு வேதாந் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பிரகாஷ் ராஜ் தனது இரண்டாவது மனைவியுடன் 11 வது திருமண விழாவை கொண்டாடி இருக்கிறார். அப்போது தனது மகள்கள் மற்றும் மகன் முன்னிலையில் தனது மனைவிக்கு லிப் கிஸ் கொடுத்திருக்கிறார்.
குழந்தைகள் மற்றும் மனைவி உடன் திருமண நாளை கொண்டாடிய பிரகாஷ்ராஜ்

அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியது. அதாவது தன்னுடைய மகனை எதிரே வைத்துக் கொண்டு மனைவிக்கு உதட்டில் பிரகாஷ்ராஜ் முத்தம் கொடுத்ததற்கு ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகிறார்கள். ஆனால் சிலர் அவருடைய மனைவிக்கு தானே பிரகாஷ்ராஜ் முத்தம் கொடுக்கிறார் என்றும் அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.