தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களை பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அதன் மூலம் இவருக்கு கிடைக்காத பிரபலம் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை பற்றி பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
நடிகர் மற்றும் நடன இயக்குனரான லாரன்ஸ் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். யாராவது தன்னிடம் உதவி கேட்டு வந்தால் உடனே உதவி செய்யக்கூடியவர் லாரன்ஸ் என்ற பெயரை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது அறக்கட்டளை மூலம் நிறைய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் தனது அறக்கட்டளைக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம், ஏனென்றால் தற்போது நான் நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இந்த பணத்தின் மூலம் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன், உங்களின் ஆசிர்வாதம் மட்டும் போதும் என லாரன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கொண்ட லாரன்ஸை தெருவில் விட்டு அசிங்கப்படுத்தி விட்டார் ஸ்ரீ ரெட்டி. அதாவது வாய்ப்பு கேட்டு லாரன்ஸ் ஆபீசுக்கு செல்லும்போது, ஏழையாக இருந்து சினிமாவில் வந்ததால் புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு லாரன்ஸ் உதவுவதாக கூறியுள்ளார்.
இதனால் அவரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றதற்கு என்னை பயன்படுத்திக் கொண்டார் என ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார். ஆனால் இப்போது வரை எனக்கு எதுவுமே செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இரவு பார்டியில் போதையுடன் இருக்கும்போது என்னை சீரழித்து விட்டார் என ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.
இவ்வாறு நடிகர், இயக்குனர் என பலரது பெயரை கூறி பல மன்மத விளையாட்டுகளை அவர்கள் அரங்கேற்றியதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை ஸ்ரீ ரெட்டி கூறிவருகிறார். இந்த லிஸ்டில் ஸ்ரீகாந்த், விஷால், நானி என பல நடிகர்களின் பெயரை சொல்லி சர்ச்சையில் இழுத்து விட்டிருக்கிறார்.
இப்படி சொல்வது சினிமாவில் வாய்ப்புக்காக என்பதை தாண்டி இவ்வாறு பேசியதால் ஊடகங்கள் பேட்டி எடுப்பதன் மூலமும் ஸ்ரீ ரெட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். இதையே பகடைக்காயாய் வைத்த நிறைய பணமும் சம்பாதித்து விட்டார்.