அட பைத்தியமா நீ.? செத்து செத்து விளையாண்ட பூனம் பாண்டே.. அவரே வெளியிட்ட வீடியோவால் வெடித்த சர்ச்சை

Poonam Panday Is Alive: நேற்று சோசியல் மீடியாவில் பல செய்திகள் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதில் முக்கியமான ஒன்று 32 வயதே ஆன நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது. இது அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த செய்தியை தொடர்ந்து அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து இருந்தனர். ஆனால் இப்போது நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று பூனம் பாண்டே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அடுத்தடுத்து திரையுலகில் பல மரண சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பூனம் பாண்டே செத்து செத்து விளையாடுவோமா என்ற கதையாக இப்படி ஒரு வேலையை செய்திருப்பது சர்ச்சையாகவும் மாறி உள்ளது.

ஆனால் அவரோ மிகவும் கூலாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தான் இப்படி ஒரு விஷயத்தை செய்ததாக கூறியுள்ளார். மேலும் பெண்களை அதிக அளவில் தாக்கும் இந்த நோய் நிச்சயம் குணப்படுத்தக்கூடியது தான். முன்பே கண்டறிந்தால் இதற்கு சுலபமான தீர்வை காணலாம்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களை தாக்கும் இந்த உயிர் கொல்லி நோயை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மரணமடைந்ததாக கூறிய செய்தியால் மன வருத்தத்திற்கு ஆளான அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல விஷயத்திற்காக பூனம் பாண்டே இவ்வாறு செய்திருந்தாலும் தற்போது இந்த விவகாரம் கொந்தளிப்பை தான் ஏற்படுத்தி இருக்கிறது. அட பைத்தியமே நீ விளையாடுவதற்கு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் தான் கிடைத்ததா என ரசிகர்கள் அவரை ஒரு பக்கம் கேவலமாக கிழித்து வருகின்றனர்.