விஜய் டிவி நிறுவனம் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளை துவங்கிவிட்டனர். தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுவரை வந்த பிக்பாஸில் கடந்த சீசன் மிகவும் மொக்கையாக இருந்ததால் அடுத்த சீசனை எப்படியாவது கலகலப்பாக கொண்டு சென்று விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாம் விஜய் டிவி நிறுவனம்.
மேலும் கடந்த முறை கொரானா என்பதால் விஜய் டிவி முன்னால் பேசி வைத்த போட்டியாளர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் வேறு வழியே இல்லாமல் அறந்தாங்கி நிஷா போன்ற போட்டியாளர்களை களமிறக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால் தற்போது எல்லாமே சரியாக அமையும் பட்சத்தில் எதிர்பார்த்த போட்டியாளர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற இரண்டு பெண் போட்டியாளர்களிடம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதில் ஒருவர் பவித்ரா. இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள பவித்ரா சினிமா வாய்ப்பை தேடிக் கொண்டிருப்பதால் கண்டிப்பாக பிக்பாஸில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மற்றொரு போட்டியாளரான பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் கனி என்பவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் விஜய் டிவி இந்த முறை விஜய் டிவி பிரபலங்கள் குறைத்துவிட்டு சினிமா பிரபலங்களை அதிகமாக வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் பெரும்பாலோனோர் விஜய் டிவி பிரபலங்கள் தான் என்பதும், அதுதான் நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
