கூலி FDFS டைம் லிஸ்ட் இதோ.. யாரு முதல் விமர்சனம் தெரியுமா?

கூலி படத்தின் First Day First Show (FDFS) நேரங்கள் தற்போது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களது நேரங்களை செட் செய்து முதல் காட்சியை காண தயாராக உள்ளனர். குறிப்பாக ரஜினி லோகேஷ் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

அமெரிக்கா இங்கிலாந்து கனடா ரசிகர்களுக்கு காலை 4 மணிக்கு காட்சி ஆரம்பமாகிறது. நேர வித்தியாசம் இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் அதிகாலையிலும் உற்சாகமாக காட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அந்நாட்டு ரசிகர்களுக்கு இது ஒரு திருவிழா போலவே உள்ளது.

 UAE யிலும் காலை 4 மணிக்கு கூலி திரையில் ஒளிபரப்பாக இருக்கிறது. அங்கு இருக்கும் தமிழ் மற்றும் இந்திய ரசிகர்கள் முதல் காட்சி டிக்கெட்டை பெறுவதற்காக போட்டிப்போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். அந்நாட்டு திரையரங்குகளும் ரசிகர் கூச்சலால் குலுங்க போகிறது.

 இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காலை 6 மணிக்கு காட்சி ஆரம்பமாகிறது. வடஇந்தியாவில் ரஜினி ரசிகர்கள் அதிகம் என்பதால் அங்கு கூட எதிர்பார்ப்பு சூடு பிடித்துள்ளது. டெல்லி ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பு திருவிழாவாக இருக்கும்.

மும்பையில் காலை 5 மணிக்கு திரை ஏறுகிறது. பாலிவுட் நகரிலும் ரஜினி ரசிகர்கள் குறையாததால், காட்சி ஆரம்பிக்கும் நேரத்திலேயே ஹவுஸ் புல் நிலை உருவாகும். மும்பை ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.

 கேரளா கர்நாடகாஆகிய இடங்களில் காலை 6 மணிக்கு காட்சி ஆரம்பமாகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை திரையில் காண போகிறார்கள்.

ஆனால் நமக்கு ஒரிஜினல் ரிவ்யூ காலை 9 மணிக்குப் பிறகு கிடைக்கும் அதுவரை நாமும் காத்திருப்போம் மற்ற நாட்டில் இருந்து ரஜினி புயல் எப்படி அடிக்குதுன்னு லைவா பாக்கலாம்.