அக்டோபர் 14ஆம் தேதி உலகமெங்கும் கூலி படம் ரிலீஸ் ஆனது. நேற்று வரை சரியாக 6 நாட்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த ஆறு நாட்களில் செய்த வசூல் சாதனையை பட்டியலிட்டுள்ளனர். முந்தைய ரஜினி படங்களை காட்டிலும் இந்த கலெக்ஷன் ரிப்போர்ட் பாசிட்டிவாக தான் வந்திருக்கிறது.
முதல் நாளான 14ஆம் தேதி இந்த படத்திற்கு மாஸ் ஓப்பனிங் கிடைத்தது.வெள்ளிக்கிழமை வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த விடுமுறை நாட்களை குறி வைத்தனர். சிறப்பு காட்சிகள் எதுவும் இந்த படத்திற்காக ஒதுக்கவில்லை. சரியாக காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் இந்த படம் ரிலீஸ் ஆனது.
ரிலீஸ் ஆன முதல் நாள் அதாவது வியாழக்கிழமை அக்டோபர் 14ஆம் தேதி இந்தியாவில் மட்டும் 65 கோடிகள் வசூலித்து பட்டையை கிளப்பியது. இதற்கு அடுத்த நாளான சுதந்திர தின விடுமுறை நாள் அன்று வெள்ளிக்கிழமை15 சதவீதம் சரிவு ஏற்பட்டு 54.75 கோடிகள் வசூலித்துள்ளது.
அந்த வார இறுதி சனிக்கிழமை அன்று 39.5 கோடிகளும், ஞாயிற்றுக்கிழமை 35.25 கோடிகளும் வசூலித்துள்ளது. அதற்குப் பின் முதல் சறுக்கலாக திங்கட்கிழமை வசூல் வெறும் 12 கோடிகளாக குறைந்தது. அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை 8. 25 கோடிகளாக மாறியது.
இப்படி ஆறு நாட்களில் மொத்தமாய் 216 கோடிகள் வசூலித்துள்ளது இந்த சென்சஸ் ரிப்போர்ட் இந்தியாவில் மட்டும் தான். உலக அளவில் சேர்த்து பார்த்தால் கூலி படத்தின் 350 கோடிகளை தாண்டி உள்ளது. இன்னும் படம் ஓடும் நாட்களை கணக்கிட்டு பார்த்தால் குறைந்தபட்சம்v 500 கோடிகளை எட்டிவிடும். ஆனால்1000 கோடிகள் வசூல் எல்லாம் சாத்தியம் இல்லை.