Thug life படத்துக்கு சொன்ன அதே வார்த்தை.. நாகர்ஜுனாவால் பயத்தில் கூலி படக்குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனைகளை படைக்கும் படைப்பாக இது எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை, சமீபத்தில் வெளியான டிரெய்லர் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் ஆரவாரத்தால் பரபரப்பாக இருந்தது. விழாவில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பேச்சும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா ஒரு கூலி 100 பாட்ஷாக்களுக்கு சமம் என்றும் ரஜினிகாந்தை இந்தியத் திரைப்படத் துறையின் ஒஜி சூப்பர் ஸ்டார் எனக் கூறி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஆனால் அதில் சில ரசிகர்கள் நாகார்ஜுனா பேசியதை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

இப்படி தான் ஒருத்தரு ஒரு Thug Life 100 நாயகனுக்கு சமம் என்று சொல்லிட்டு இருந்தார். ஆனால் இப்போ PAN இந்திய படமாக வெளிவந்த Thug Life இருந்த இடம் தெரியாமல் போயிட்டு என்று கலாய்த்து வருகின்றனர். இந்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இப்படி பேசுபவர்கள் கூலி படத்தின் மீதான ஹைப் இன்னும் அதிகரிக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை. ரசிகர்களிடையே “First Day First Show” பார்க்கும் ஆர்வம் உச்சத்தில் உள்ளது. முன்பதிவு தகவல்களும் அதையே நிரூபிக்கின்றன.
ரஜினிகாந்த் லோகேஷ் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு ஒரு மாபெரும் திருவிழாவாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

நாகார்ஜுனாவின் புகழ்ச்சி மற்றும் ரசிகர்களின் கலாய்ப்பு இரண்டுமே படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூலி திரையில் எவ்வாறு வெடிக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.