Coolie : கூலி படத்தை பற்றி எல்லாரும் பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படம் ரஜினிக்கு சாதனை படமாக அமையவேண்டும் என அனைவரும் வாழ்த்து சொல்லிக்கொண்டு வருகிறார்கள். கூலியும் சாதனையை நோக்கி மிக வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது.
இந்தமாதிரி வேலையில் சத்யன் ராமசாமி என்ற பிரபலம். கூலி கண்டிப்பாக வெற்றி பெரும் அதில் எந்த மாற்றமும் இல்லை, இந்த வெற்றிக்கு காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதாலோ, அனிருத் இசையோ இல்லை.
அல்லது கன்னட நடிகர், தெலுங்கு நடிகர், மலையாள நடிகர் இப்படியெல்லாம் காரணத்தை அடுக்கி வைத்து கொண்டே செல்கிறார்கள். உண்மை காரணம் இது எதுமே கிடையாது.
கூலி ரஜினியின் ஒன்-மேன் ஷோ..
ரஜினி ஒருவரால் தான் இந்த படம் வெற்றியடைய போகிறது. மற்ற எல்லாரும் வேஸ்ட் என கூறியுள்ளார். ரஜினிக்காக மட்டுமே இந்த படம் ஓடப்போகிறது. ரஜினி நடித்தாலே போதும் அந்த படம் ஹிட். ரஜினி ஒன்-மேன் ஷோ நடத்தி இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டுவந்திருக்கிறார்.
ரஜினியை வைத்து லோகேஷ் மார்கெட்டை பெற்றுருகிறார் எனவும் கூறியுள்ளார் சத்யன் ராமசாமி. லோகேஷ் இதுவரை இயக்கிய எல்லா படமும் ஹிட் அடித்துள்ளது. அனிருத் இசையில் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரு நபர்.
ரஜினி நடித்து எந்த படமும் தோல்வி அடைந்தது இல்லையா? “காலா”, “லால் சலாம்” ரஜினியின் ஒன்-மேன் ஷோ தானே! பிறகு ஏன் தோல்வி அடைந்தது என சில திரை பிரபலங்கள் சத்யன் ராமசாமி-யை கேட்டு வருகிறார்களாம். சும்மா வாய் இருக்குனு உருட்டாதீங்க என்றும் கூறியுள்ளார்களாம்.