கூலி டைம் டிராவல் படமா? லோகேஷ் விளக்கம்

திரையுலகை ஆட்டி படைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் மாஸ் அவதாரத்தோடு, லோகேஷின் அசத்தும் இயக்கம் சேர்ந்திருக்கும் இந்தப் படம் குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் வெளியாகியுள்ள கூலி டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டீசரில் அடிக்கடி காணப்படும் வாட்ச் மற்றும் தொழில்நுட்ப ஒளிப்படங்கள், இது ஒரு டைம் டிராவல் படமா என்ற சந்தேகங்களை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் விளக்கம்

படத்தின் டீசரில் டைம் காட்டும்  வாட்ச் மிக முக்கியமாக இடம்பெற்றுள்ளன. இதனால் ரசிகர்கள், இது ஒரு sci-fi கதையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதெல்லாம் உண்மைதானா? என எதிர்பார்க்கும் நிலையில்

இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். அவர் கூறும்போது, படம் முழுவதும் ஒரு ‘வாட்ச் ஃபேக்டரி’ பின்னணியில் அமைந்திருப்பதைக் கூறினார். அதனால் படத்தில்  வாட்ச் அதிகமாகக் காணப்படுவது இயல்பான விஷயமாகும்.

இது ஒரு விஞ்ஞான கற்பனை (sci-fi) திரைப்படம் அல்ல எனவும், டைம் டிராவல் என்பது கதைக்குள் சேர்க்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அதாவது அந்த வாட்சையே செயின் போல பயன்படுவதற்கு செய்த ஐடியா தான் என்று கூறியுள்ளார். வாட்ச் புவியியல் நேர மாற்றங்களை காட்ட அல்ல அதற்குப் பதிலாக படத்தின் மாஸ் ஸ்டண்ட் காட்சிகளை அதிகரிக்கவே பயன்படுகிறது. இது ஒரு யதார்த்தமான மாஸ் ஆக்‌ஷன் திரைப்படம் என்பதை அவர் கூறியுள்ளார்.

கூலி டைம் டைம் டிராவல் படமா, sci-fi படமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் லோகி இது ஒரு மாஸ் ஆக்‌ஷன் படம் என்று கூறியுள்ளார். உண்மையான சர்ப்ரைஸ் படம் ரிலீஸ் ஆன பிறகுதான் தெரியும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.