கூலி vs வார் 2.. Book My Show-ல யாரு பொளந்து கட்டுறது தெரியுமா?

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் டிக்கெட் தளமாக இருக்கிறது Book My Show. எந்த ஒரு பெரிய திரைப்படமும் வெளியாவது முன், இத்தளத்தில் ரசிகர்களின் “Interest Count” மூலம் அந்த படத்தின் ஹைப் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணிக்க முடிகிறது. இங்கு அதிக எண்ணிக்கையிலான இன்டரெஸ்ட் பெறுவது என்பது வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற அடையாளமாகக் கருதப்படுகிறது.

இந்த முறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இரண்டு படங்கள் ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஹ்ரிதிக் ரோஷனின் வார் 2. இந்த இரண்டு படங்களுமே பிரம்மாண்ட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், Book My Show இல் ஏற்பட்ட புதிய சாதனை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கூலி- 545K+ இன்டரெஸ்ட் எண்ணிக்கை எட்டியுள்ளது, இது ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். அதே நேரத்தில் வார் 2- 541K இல் நிறைந்துள்ளது. இந்த வித்தியாசம் சிறியது போலத் தெரிந்தாலும் இது ஒரு பெரிய தமிழ்ச் சாதனையாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் 500K+ இன்டரெஸ்ட் எண்ணிக்கையை எட்டவில்லை. Coolie தான் முதல் தமிழ் படம் அந்த வரம்பை தாண்டியது. இது ரஜினிகாந்தின் மாஸ் இமேஜையும், கூலி படத்தில் மேல் ரசிகர்களின் ஆர்வத்தையும் காட்டுகிறது.

லோகேஷ் கனகராஜின் தனித்துவமான டைரக்ஷன், நன்கு திட்டமிடப்பட்ட டீசர், மற்றும் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைல் மற்றும் பஞ்ச் டயலாக் மக்களுக்கு வித்தியாசமான தாக்கம் ஏற்படுத்தும் டைட்டில் இவை அனைத்தும் சேர்ந்து இந்த படம் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தாக்கம் BookMyShow-ல் interest count-ஐ கணிசமாக உயர்த்தியது.

இது வெறும் ஒரு டிஜிட்டல் சாதனை அல்ல, தமிழ் சினிமா உலகளாவிய வளர்ச்சிக்காக ஒரு புது வரலாற்றைப் பதிக்கிறது என்றே கூறலாம்.கூலி இந்த சாதனையின் மூலம் எதிர்பார்ப்புகளை கடந்து சாதனைகள் நோக்கி செல்கிறது. ரஜினியின் மாஸ் என்றால் இது தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.