பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி ,லோகேஷ் கூட்டணியில் உருவான கூலி படம் இன்று காலை 9 மணிக்கு ரிலீசானது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1000 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசானது. ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல் கொண்டாட்டத்துடன் சென்னையை அதிரவிட்டனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இருந்தே சொல்லும் மெசேஜ் தீய பழக்கம் வேண்டாம் என்பதுதான். இதுதான் படத்தில் ஓப்பனிங் மற்றும் ரஜினியின் அறிமுக பாடலாக இருந்தது. படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் லோகேஷ்.
ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்றாலும் முதல் பாதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாம் பாதியில் சற்று லேக் தெரிகிறது. இன்டர்வல் பிளாக்கில் மொத்தமாய் என்ன நடக்கிறது என்பதை லோகேஷ் கனகராஜ் குழப்பி சுற்றலில் விட்டிருக்கிறார்.
அப்படி எதிர்பார்க்கும் செகண்ட் ஆப் ரசிகர்களை திருப்பி அடைய செய்ததா என்பது கேள்விக்குறி தான். ஜெய்லர் விக்ரம், போன்ற படங்களை ஆங்காங்கே கூலி ஞாபகப்படுத்துகிறது. அதைப்போல் லோகேஷ் ஸ்டைலும் படத்தில் தனித்துவமாக தெரிகிறது.
கூலி தேவராஜ் ஆக வரும் ரஜினிகாந்த்திற்கு ஒரு பிளாஷ்பேக் வைத்திருக்கலாம். நண்பர் சத்யராஜ் இறப்புக்கு பழி வாங்கும் வழக்கமான கதைக்களம் தான். அதை லோகேஷ் எவ்வாறு கையாண்டிருக்கிறார் என்பது தான் கூலி படம். கட்டத்தில் நாகர்ஜுன் வில்லனா இல்லை சௌபின் ஜாகிர் வில்லனா என்பதை சுற்றலில் விட்டிருக்கிறார் லோகேஷ்.