Vijay: அஜித், விஜய்க்கு பதிலாக உருவெடுக்கும் 2 ஹீரோக்கள்.. சினிமா சகாப்தத்தை முடிக்க நரி தந்திரம் போடும் கார்ப்பரேட்

Vijay: சினிமா லாபத்தையும் தரும் நஷ்டத்தையும் தரும். ஆனாலும் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் முதலீடு செய்து பல மடங்கு லாபத்தை பார்க்கின்றனர்.

அதனால் பல நிறுவனங்கள் கூட முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய், அஜித்துக்கு பதிலாக வேறு 2 ஹீரோக்களை உருவாக்கும் முயற்சியில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் இறங்கியுள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனை வைத்து சில திட்டங்களை அவர்கள் தீட்டி இருக்கின்றனர். ஆனால் அதை புரிந்து கொண்ட விஜய் சேதுபதி நாசுக்காக வேறு ரூட்டுக்கு மாறிவிட்டார்.

கார்ப்பரேட்டின் தந்திரம்

ஹீரோ மட்டுமல்லாமல் வில்லன், கெஸ்ட் ரோல், கேரக்டர் ரோல் என அவர் தன் பாதையை மாற்றிக் கொண்டார். சிவகார்த்திகேயனின் சமீபகால படங்கள் பெரிய அளவில் லாபம் பெறவில்லை.

அதனாலேயே தற்போது அந்த நிறுவனங்கள் கவின் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரை பந்தய குதிரைகளாக தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். அதில் கவின் தான் அடுத்த தளபதி என இவர்களே இணைய கூலி படைகளை வைத்து விளம்பரம் செய்கின்றனர்.

அது மட்டும் இன்றி தற்போது வெளிவந்துள்ள ஸ்டார் படத்திற்கு கூட சோசியல் மீடியாவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நடுநிலையான விமர்சகர்களுக்கு இந்த படம் அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை.

அடுத்த விஜய்யாக மாறும் கவின்

சூர மொக்கையாக இருக்கிறது என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது. அதையெல்லாம் மழுங்கடிக்கவே இப்போது ஒரு கூட்டம் இணையத்தில் தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் முதன் முதலாக கமிட் ஆனது ஹரிஷ் கல்யாண் தான். ஆனால் உஷாராக அவர் பாதியிலேயே விலகி விட்டார். இப்போது கவினை வைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆட்டம் தொடங்கியுள்ளது.

ஏனென்றால் விஜய் இப்போது அரசியலுக்கு சென்று விட்டார். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் வெளிப்படையாக கூறிவிட்டார். அதேபோல் அஜித் பைக் ரேஸில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆக மொத்தம் விஜய், அஜித் சினிமா சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வர கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகிவிட்டது. இதுதான் இப்போது கோலிவுட்டில் அதிர்ச்சி விலகாத நிலையில் பேசப்பட்டு வருகிறது.