வித்தியாசமான நிகழ்ச்சிகளை வைத்து வெற்றிபெறுவது விஜய் டிவிக்கு ஒன்றும் புதிதல்ல அப்படி குக் மற்றும் கோமாளியை வைத்து ஒரு சமையல் நிகழ்ச்சியில் விஜய் டிவி வெற்றி பெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தான் குக் வித் கோமாளி என பெயர் வைத்தனர் .
சமீபகாலமாக பலரும் இந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்தனர். அதற்கு காரணம் ஒரு பக்கம் திறமையான சமையல் கலைஞர்களும், மற்றொரு பக்கம் காமெடி கலைஞர்களும் நிறைந்திருந்ததால் சமையலுக்கும், காமெடிக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி நன்கு பிரபலமடைந்தது.
விஜய் டிவியின் ஆரம்ப காலத்திலிருந்தே சமையல் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணியாற்றி வந்தவர் தாமு. இவர் சமையல் வல்லுனர்களின் மிகவும் முக்கியமானவர். இவர் ஏற்கனவே சமையல் சம்பந்தப்பட்ட பல விருதுகளையும், பாராட்டுக்களையும் வாங்கி குவித்துள்ளார்.

அதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு இவரை நடுவராக வைத்தனர். தாமு உடலமைப்பில் குண்டாக இருந்தாலும் அவர் செய்யும் செல்லச்செல்ல சேட்டைகள் தான் ரசிகர்களுக்கும் இவரை பிடித்து போக காரணமாக அமைந்தது.
ஒரு நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு ஒருவர் மட்டும் காரணம் என்று சொல்லவே முடியாது. அந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் தான் அந்த நிகழ்ச்சி வெற்றி பெற முடியும். அப்படி குக், கோமாளி மற்றும் நடுவர் அனைவரும் சிறப்பாக செயல்பட இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட காலத்திலேயே ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.
தற்போது தாமு முதல் முறையாக அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் தாமும் அவர்களுக்கு இவ்வளவு அழகான பெரிய மகள்கள் உள்ளார்களா என ஆச்சரியத்தில் உள்ளனர். தற்போது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.